பல்கலைகழக வேந்தராக முதலமைச்சர் வருவதற்கு யுஜிசி விதிகளில் இடம் இல்லை...ஆளுநர்

author img

By

Published : Sep 25, 2022, 6:56 AM IST

பல்கலைகழக வேந்தராக முதலமைச்சர் வருவதற்கு யுஜிசி விதிகளில் இடம் இல்லை...ஆளுநர்

பல்கலைகழக வேந்தராக முதலமைச்சர் வருவதற்கு யுஜிசி விதிகளில் இடம் இல்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ்பவனில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

தமிழகம் முற்போக்கான மாநிலமாக திகழ்கிறது. மனிதவள மேம்பாடு, உட்கட்டமைப்பு என அனைத்திலும் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகச் சிறந்த மனிதர். கவர்னர் மாளிகை, திமுக அரசுடன் நல்லுறவுடன் நீடிக்கிறது. கல்வித்துறை தொடர்பான தமிழ்நாடு அரசின் மசோதாக்கள் விளக்கம் கேட்டு மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. மேலும், ஆளுநருக்கு பதில் பல்கலைக் கழக வேந்தராக முதல்வரை நியமிப்பதற்கு யுஜிசி விதிகளில் இடம் இல்லை.

அடுத்ததாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஒரு ஆபத்தான இயக்கமாகும். என்னுடைய அனுபவத்தில் பல்வேறு இயக்கங்கள், அதன் செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்துள்ளேன் என தகவல் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை ஆளுநருக்கு பதில், மாநில அரசே நியமிக்கும் மசோதா கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஆளுநர் தெரிவித்துள்ள கருத்தால் இம்மசோதாவுக்கு அவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: திமுக எம்பி ஆ.ராசாவை கடுமையாக சாடிய செல்லூர் ராஜூ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.