ETV Bharat / city

மலேசிய அமைச்சருடன் உரையாடல் - அரசுகளுக்கு பரிந்துரைகள் வழங்குவதாக கமல் உறுதி!

author img

By

Published : Jul 30, 2021, 4:08 AM IST

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், மலேசிய மனிதவள அமைச்சரும், மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணனுடன் இணைய வழி நேரலையில் உரையாடினார்.

kamalhaasan and Malaysian Minister
kamalhaasan and Malaysian Minister

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மலேசிய அமைச்சர் சரவணனுடன் உரையாடியது குறித்து செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், "கரோனா பெருந்தொற்றால் மலேசியாவில் வாழும் தமிழர்கள் சந்தித்து வரும் நெருக்கடிகள் குறித்து விவாதித்தார்.

கலந்துரையாடலில் அவர்களுக்கான உடனடி தேவைகள், மலேசியாவில் வாழும் தமிழர்கள் சொந்த ஊர் திரும்புவதில் இருக்கும் சிக்கல்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைச் சீரமைக்கத் தமிழக, இந்திய அரசுகளின் சார்பில் செய்ய வேண்டியவை ஆகியவற்றைக் குறித்து உரையாடினார்கள்.

  • மலேசிய, இந்தியத் தமிழர்களின் நலன் குறித்த கலந்துரையாடல்,
    மக்கள் நீதி மய்யத் தலைவர்
    பத்மபூஷன் டாக்டர் @ikamalhaasan அவர்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

    மக்கள் நலன் காக்க இது போன்ற கலந்துரையாடல்கள் தொடர வேண்டும். pic.twitter.com/BUNl3SnLdf

    — Datuk Seri M. Saravanan (@DatukSaravanan) July 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மலேசியாவிற்கு முறையான அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் மூலம் வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தடுக்க, தமிழ்நாடு அரசு மலேசியாவில் நம்பத்தகுந்த நிறுவனம் ஒன்றை அமைத்து, அதன் மூலம் வேலைவாய்ப்புகளின் உண்மைத் தன்மையை உறுதிசெய்தபின், தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதை அனுமதிக்கலாம் என்று மலேசிய அமைச்சர் சரவணனின் ஆலோசனையைத் தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்துவதாகக் கமல்ஹாசன் தெரிவித்தார்.

  • தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் மலேசிய மனிதவள அமைச்சரும், மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் தேசியத் துணைத் தலைவருமான @DatukSaravanan அவர்களுடன் இணைய வழி நேரலையில் உரையாடினார்.https://t.co/ed8g7jOyEh#KamalHaasan #MakkalNeedhiMaiam

    — Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) July 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மலேசியாவில் பணி செய்துகொண்டிருக்கும் 67ஆயிரத்து 395 தமிழர்களின் நலனுக்காக மனிதவள அமைச்சர் சரவணன் முன்வைத்த கோரிக்கைகள், பரிந்துரைகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசிடமும் தெரிவிப்பதாகக் கமல்ஹாசன் உறுதியளித்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.