ETV Bharat / city

சென்னையில் காற்று மாசுபாடு இருமடங்கு அதிகம்: கிரீன்பீஸ் ஆய்வறிக்கை

author img

By

Published : Jul 9, 2021, 8:33 AM IST

காற்று மாசுபாடு (நைட்ரஜன் டை ஆக்சைடு) அதிகரித்துள்ள எட்டுத் தலைநகரங்களின் பட்டியலில் சென்னை நகரமும் அடங்கியுள்ளது என 'கிரீன்பீஸ்' இந்தியாவின் புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

சென்னையில் காற்று மாசுபாடு குறித்து கிரீன்பீஸ் ஆய்வறிக்கை
சென்னையில் காற்று மாசுபாடு குறித்து கிரீன்பீஸ் ஆய்வறிக்கை

சென்னை: கிரீன்பீஸ் இந்தியா 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் வரை மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், லக்னோ ஆகிய இடங்களில் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு மேற்கொண்டது.

செயற்கைக்கோள் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, சென்னையைப் பொறுத்தமட்டில் காற்று மாசுபாடு சுமார் 50 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அதாவது கடந்த ஏப்ரல், 2020இல் 47 விழுக்காடாக இருந்த மாசுபாடு, ஏப்ரல் 2021 மாதம் 94 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இப்படி காற்று மாசுபாடு அதிகரித்ததற்கு வாகன நெரிசல் முக்கியப் பங்கு வகித்துள்ளது என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.

வடசென்னையும் பிற சென்னையும்

இதுகுறித்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுற்றுச்சூழல் பொறியாளரான பிரபாகரன் வீரராசு கூறுகையில், 'சென்னையின் காற்று மாசுபாட்டை வெப்பத்தின் போது, வெப்பம் இல்லாத போது என ஒப்பிட்டு இரண்டுக்குமான வித்தியாசத்தை கிரீன்பீஸ் ஆய்வறிக்கைத் தெளிவாக காட்டுகிறது.

அனல் மின் நிலையங்கள், பெட்ரோ ரசாயனத் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் உள்ளிட்டவைகளில் இருந்து வெளியேறும் புகைகள் வடசென்னையின் மாசுபாட்டிற்கும், வாகனங்களிலிருந்து வெளியேறும் புகைகள் மத்திய, தென்சென்னை ஆகியவற்றின் மாசுபாட்டிற்கும் அதிக பங்களிப்பை அளிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்கால இலக்குகள்

சென்னையின் மக்கள்தொகையில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி நகர்வது, பொது போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், மோட்டார் அல்லாத போக்குவரத்தை ஊக்குவித்தல் ஆகியவை சென்னையில் வாகனத்தால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைப்பதற்கான எதிர்கால இலக்குகளாக இருக்க வேண்டும்" என்றார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கூற்றுப்படி, 2019ஆம் ஆண்டில் வடசென்னையில் உள்ள மணலி அனல் மின் நிலையத்தில் காற்றின் தரம், 119 நாட்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத மாசுபாட்டைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னை ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்ரண்டீஸ் பணியாளர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.