9 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு

author img

By

Published : Sep 23, 2021, 7:41 PM IST

government issued upgrade order of 9 town panchayats to municipalities

தமிழ்நாடு அரசு, 9 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள், வரிமுறை மாற்றம், நகராட்சி ஆணையர் நியமனம் உள்ளிட்ட விதிகள் திருத்தி அமைக்கப்படவுள்ளன.

சென்னை: நடந்துமுடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அமைச்சர் கே.என்.நேரு பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பின்படி, 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,

  • தென்காசி மாவட்டம் - சுரண்டை
  • திருநெல்வேலி மாவட்டம் - களக்காடு
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் - திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை
  • காஞ்சிபுரம் மாவட்டம் - குன்றத்தூர், மாங்காடு
  • விழுப்புரம் மாவட்டம் - கோட்டக்குப்பம்
  • ராணிப்பேட்டை மாவட்டம் - சோளிங்கர்
  • செங்கல்பட்டு மாவட்டம்- நந்திவரம், கூடுவாஞ்சேரி

ஆகிய 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பூர்வாங்கப் பணிகள், வரிமுறை மாற்றம், நகராட்சி ஆணையர் நியமனம் உள்ளிட்ட விதிகள் திருத்தி அமைக்கப்பட இருக்கிறது.

இதையும் படிங்க: ‘மண்ணையும் மக்களையும் காப்பதில் சளைக்காத ஆட்சி திமுக’ - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.