திமுகவில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு

author img

By

Published : Sep 18, 2022, 7:15 PM IST

Updated : Sep 18, 2022, 7:41 PM IST

Etv Bharat

கோயம்புத்தூர், திருப்பூர், தர்மபுரி, மதுரை மாநகர் ஆகிய மாவட்டங்களில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக திமுக நிர்வாகம் பிரிக்கப்பட்டுள்ளது.

சென்னை: திமுகவின் கட்சிப் பணிகளை விரைவுபடுத்துவதற்கும், நிர்வாக வசதிக்காகவும் கோயம்புத்தூர், திருப்பூர், தர்மபுரி, மதுரை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களை உருவாக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவினர் அதிகளவில் வெற்றி பெறாத மாவட்டங்களில் கட்சியை வளர்க்க புதியதாக மாவட்டங்களைப் பிரித்து அறிவித்துள்ளனர். கோயம்புத்தூர், திருப்பூர், தர்மபுரி, மதுரை மாநகர் ஆகிய மாவட்டங்களில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகம் பிரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (செப்.18) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கட்சியின் நிர்வாக வசதிக்காகவும், பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் கோயம்புத்தூர், திருப்பூர், தர்மபுரி, மதுரை மாநகர் ஆகிய மாவட்டங்களில் சட்டப்பேரவைத்தொகுதிகள் அடங்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர் மாவட்டம்

* சிங்காநல்லூர்
* கோவை தெற்கு
* கோவை வடக்கு

கோவை வடக்கு மாவட்டம்

* மேட்டுப்பாளையம்
* தொண்டாமுத்தூர்
* கவுண்டம்பாளையம்
* அவினாசி

கோவை தெற்கு மாவட்டம்

* சூலூர்
* கிணத்துகடவு
* வால்பாறை (தனி)
* பொள்ளாச்சி

திருப்பூர் வடக்கு மாவட்டம்

* திருப்பூர் வடக்கு
* திருப்பூர் தெற்கு
* பல்லடம்

திருப்பூர் தெற்கு மாவட்டம்

* உடுமலைப்பேட்டை
* மடத்துக்குளம்
* தாராபுரம்
* காங்கேயம்

மதுரை மாநகர் மாவட்டம்

* மதுரை வடக்கு
* மதுரை தெற்கு
* மதுரை மத்திய
* மதுரை மேற்கு

தர்மபுரி கிழக்கு மாவட்டம்

* தருமபுரி
* பென்னாகரம்

தர்மபுரி மேற்கு மாவட்டம்

* அரூர் (தனி)
* பாப்பிரெட்டிபட்டி
* பாலக்கோடு

சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியதாக கட்சி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன' என அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுகவின் மாவட்டப்பதவிகளுக்கு தேர்தல் அறிவிப்பு!

Last Updated :Sep 18, 2022, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.