தயார் நிலையில் இருங்கள்! - ஐஜிக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

author img

By

Published : Nov 28, 2021, 9:37 AM IST

டிஜிபி சைலேந்திரபாபு

இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்வுசெய்யப்பட்ட நபர்களுக்குப் பயிற்சி வழங்க தயார் நிலையில் இருக்குமாறு காவலர் பயிற்சி அகாதமி ஐஜிக்கு டிஜிபி (காவல் துறைத் தலைவர்) சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் காவல், சிறை, சீர்த்திருத்த பணிகள், தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறைகளிலுள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கான 11 ஆயிரத்து 812 காலிப் பணியிடங்களை நிரப்ப 2020 செப்டம்பர் 17 அன்று தேர்வு நடத்தப்பட்டது.

இத்தேர்வுக்கான எழுத்துத் தேர்வில் ஐந்து லட்சத்து 50 ஆயிரத்து 314 விண்ணப்பதாரர்கள் பங்கேற்று தமிழ்நாட்டில் உள்ள 37 மையங்களில் 2020 டிசம்பர் 13 அன்று எழுதினர். எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் 2021 பிப்ரவரி 19 அன்று வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களில் 1.5 விகிதத்தில் 20 மையங்களில் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, உடல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.

மேலும் கடந்த செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 113 விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. மொத்தமாக 11 ஆயிரத்து 812 விண்ணப்பதாரர்கள் இந்தப் பொதுத்தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

தற்காலிகமாகத் தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் சேர்க்கை எண்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டது. மேலும் தற்காலிகமாகத் தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குப் பணி ஆணை வழங்குவதற்கு முன்னர் மருத்துவப் பரிசோதனை, இன்றைய பழக்கவழக்கங்கள் தொடர்பான காவல் விசாரணை அந்தந்தத் துறை மூலம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஐஜிக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
ஐஜிக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

இந்த நிலையில் ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படை தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 10 ஆயிரத்து 391 இரண்டாம் நிலை காவலர்களுக்கு வருகிற ஜனவரி முதல் வாரத்தில் அடிப்படை பயிற்சி வழங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அடிப்படை பயிற்சி வழங்கும் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் காவல் பயிற்சி மைய அகாதமி ஐஜி மேற்கொள்ளுமாறு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: துப்பாக்கிகளைப் பயன்படுத்த தயங்காதீர்! - காவலர்களுக்கு டிஜிபி 'அழுத்தமான' அறிவுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.