Covid19 Restrictions: டிசம்பர் 15ஆம் தேதி வரை கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - மு.க.ஸ்டாலின்

author img

By

Published : Nov 30, 2021, 6:31 PM IST

covid restrictions extended

தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் கரோனா தடுப்புக் கட்டுப்பாடுகள் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதில் கரோனா கட்டுப்பாட்டுப்பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது போல், தமிழ்நாடு - கேரளா இடையே பொதுப்போக்குவரத்திற்கும் அனுமதி வழங்கப்படுகிறது எனவும் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுனர் மகள் தங்கப் பதக்கம் வென்று சாதனை

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.