ETV Bharat / city

தமிழ்நாடு முழுவதும் இன்று 20ஆவது மெகா தடுப்பூசி முகாம்

author img

By

Published : Jan 29, 2022, 6:51 AM IST

தமிழ்நாடு முழுவதும் இன்று 20ஆவது மெகா தடுப்பூசி முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

Covid-19 20th mega vaccination camp
Covid-19 20th mega vaccination camp

சென்னை: தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மெகா கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்திவருகிறது.

இதுவரை 19 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் ஐந்து கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அதைத்தொடர்ந்து இன்று 20ஆவது மெகா தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசியும், இணை நோயுடன் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படஉள்ளது. குறிப்பாக இம்மையங்களை, இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க: 'மாணவர்கள் அதிகமுள்ள பள்ளிகளில் சுழற்சி வகுப்புகள் வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.