அம்பேத்கரும், அப்துல் கலாமும் எந்த வர்ணம்? - சின்மயா மிஷன் தயாரித்துள்ள பாடப்புத்தகத்தில் சர்ச்சை

author img

By

Published : Oct 2, 2022, 4:18 PM IST

Updated : Oct 2, 2022, 4:54 PM IST

Etv Bharat

சென்னையில் சின்மயா மிஷன் தயாரித்துள்ள ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கேள்வியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சென்னை: இந்து மத அமைப்பான சின்மயா மிஷன், நாடு முழுவதும் ஏராளமான கல்வி நிலையங்களை நடத்தி வருகிறது. மேலும், பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களையும் தயாரித்து வழங்குகிறது.

இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியானது, சின்மயா மிஷன் தயாரித்து வழங்கும் புத்தகங்களை பாடத்திட்டமாக பயன்படுத்தி வருகிறது.

ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற கேள்வியால் சர்ச்சை
ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற கேள்வியால் சர்ச்சை

சின்மயா மிஷன் தயாரித்துள்ள ஆறாம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில், மனிதர்கள் அவர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எனும் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் அம்பேத்கர் மற்றும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்டோர் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் என சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றுள்ளது.

சின்மயா மிஷன்
சின்மயா மிஷன்

சின்மயா மிசன் அமைப்பு 6ஆம் வகுப்பு வரலாற்று புத்தகத்திற்கு 'ரேடியன்ட் பாரத்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சமத்துவத்தை பயில வேண்டிய வயதில், இளம் சிறார்கள் மனதில் வர்ணாசிரமத்தை தொகுத்து அதனடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாக கல்வியாளர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

சின்மயா மிஷன் தயாரித்துள்ள ஆறாம் வகுப்பு பாடப்புத்தகம்
சின்மயா மிஷன் தயாரித்துள்ள ஆறாம் வகுப்பு பாடப்புத்தகம்

மத்திய அரசின் கல்வித்திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி என்பதால், தமிழ்நாடு அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாவிட்டாலும், மத்திய கல்வி வாரியத்தின் தென்மண்டல அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது. அவர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்ய முடியாது - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

Last Updated :Oct 2, 2022, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.