நிலக்கரி தட்டுப்பாடு: மின் தடை ஏற்பட அதிக வாய்ப்பு

author img

By

Published : Oct 11, 2021, 6:12 AM IST

Updated : Oct 12, 2021, 1:06 PM IST

நிலக்கரி தட்டுப்பாடு, india coal shortage நிலக்கரி,

நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், சில மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் மின்தடை ஏற்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: தென் மாநிலங்களில் தமிழ்நாடு, வட மாநிலங்களில் ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மிகக் குறைந்த அளவே நிலக்கரி இருப்பு உள்ளதால், இன்னும் ஒரு சில நாள்களில் முழுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மின் கட்டண உயர்வு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என அலுவலர்கள் கூறுகின்றனர்.

அனல்மின் நிலைய உற்பத்தி பாதிப்பு

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி மூலமே தங்களது மின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்கின்றன. மேலும், தேவைக்கேற்ப வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதியும் செய்யப்பட்டுவருகிறது.

தற்போது, உலக அளவில் நிலக்கரியின் விலை 40 முதல் 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதால், இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி வெகுவாகச் சரிந்துள்ளது. மேலும், அனல்மின் நிலையங்களும் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியைச் சார்ந்திருப்பதால், அனல்மின் நிலையங்களிலும் உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது.

இறக்குமதியில் நீடிக்கும் சிக்கல்

கரோனா பெருந்தொற்று தொடங்கிய பின் அனைத்து வகையான அத்தியாவசிய பொருள்களின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளது எனப் பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, "உலக அளவில் நிலக்கரியின் விலை அதிகரித்திருப்பது உண்மை. இதுபோன்ற பிரச்சினையை இந்தியா ஏற்கனவே எதிர்கொண்டுள்ளது.

எனினும், கரோனா பெருந்தொற்றுக்குப் பின் பொருளாதார நிலைமையில் சிக்கல் நீடித்துவருகிறது. இதனால், நிலக்கரி இறக்குமதி செய்வதிலும் சிக்கல் நீடிக்கிறது" எனக்கூறிய பொருளாதார வல்லுநரான ஞான ஜோதி, பெட்ரோல் - கட்டுமான பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது எனக் கூறினார்.

ஒப்புக்கொண்ட செந்தில்பாலாஜி

தமிழ்நாடு மின் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "இந்தப் பிரச்சினை நீடித்தால், மின் நுகர்வோர்கள் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். மேலும், மின்தடை அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

தற்போது, சூழலியல் ஆர்வலர்கள் அனல்மின் நிலையங்கள் பெரும் மாசுபாட்டை உண்டாக்குவதாக எதிர்ப்புத் தெரிவித்துவருவதால், காலநிலை மாற்றத்தைக் கருத்தில்கொண்டு ஒன்றிய அரசு நிலக்கரி இறக்குமதி செய்வதை நிறுத்தியிருக்கலாம்" எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டிலும் நிலக்கரி பற்றாக்குறை உள்ளதாக அண்மையில் மின்சாரத் துறை செந்தில் பாலாஜி ஒப்புக்கொணடார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அது விரைவில் சரிசெய்யப்பட்டு அதிக அளவில் நிலக்கரி உற்பத்திசெய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியால் நேர்ந்த விபரீதம்!

Last Updated :Oct 12, 2021, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.