ரூ.538 கோடி மதிப்பிலான திட்ட ஒப்பந்தத்தை வென்ற டாடா பவர்

author img

By

Published : Oct 12, 2021, 5:48 PM IST

Tata Power Solar bag

நூறு மெகாவாட் சோலார் மின் உற்பத்தி செய்யும் ரூ.538 கோடி மதிப்பிலான திட்ட ஒப்பந்தத்தை டாடா பவர் நிறுவனம் வென்றுள்ளது.

இந்தியாவில் சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதற்காக பல திட்டங்களை அரசு முன்னெடுத்துவரும் நிலையில், அரசின் எனர்ஜி எபிசியன்சி சர்வீஸ் லிமிடெட் நூறு மெகாவாட் சோலார் மின் உற்பத்தி திட்டத்திற்கான ஒப்பந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை ரூ.538 கோடிக்கு டாடா பவர் நிறுவனம் வென்றுள்ளது. இந்த திட்டப்பணிகள் ஒரு வருடத்திற்குள் நிறைவேற்றப்படும் என டாடா பவர் நிறுவனம் கூறியுள்ளது. இந்த திட்டமானது மகாராஷ்டிராவை மையமாக வைத்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி சோலார் மின் உற்பத்தி திட்டங்களை டாடா பவர் நிறுவனம் செயல்படுத்திவருகிறது. குஜாரத் மாநிலத்தில் 400 மெகாவாட் சோலார் பூங்கா திட்டம், ஆந்திரா மாநிலம் அனந்தபூரில் 150 மெகாவாட், கேரளாவின் காயங்குளத்தில் 105 மெகாவாட், காசர்கோட்டில் 50 மெகாவாட், ஓடிசாவின் லபங்காவில் 30 மெகாவாட் சோலார் திட்டங்களை டாடா பவர் நிறுவனம் இதுவரை செயல்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 2021 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்ற மூவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.