அடடே தங்கம் விலை! - இரட்டிப்பு மகிழ்வில் வாடிக்கையாளர்கள்

author img

By

Published : Sep 17, 2021, 12:26 PM IST

அடடே தங்கம் விலை..!!

தங்கம் விலை தொடர் சரிவால் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது.

நேற்றைய தங்கம் விலையைத் தொடர்ந்து இன்றும் (செப். 17) விலை சரிந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ரூ. 4,365 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ரூ. 34,920 என விற்பனையாகிறது.

24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,729 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 37,832 என விற்பனையாகிறது.

நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 35,320 என விற்பனையானது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ. 65.50 என விற்பனையாகிறது. கிலோ வெள்ளிக்கு 1,500 ரூபாய் குறைந்து ரூ. 65,500 என விற்பனையாகிறது.

நேற்றைய நிலவரப்படி வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 67,000 என விற்பனையானது.

இதையும் படிங்க: 'ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.