மக்களே உஷார்... தங்கம் வாங்க இது சரியான நேரம்!

author img

By

Published : Sep 16, 2021, 1:26 PM IST

தங்கம் வாங்க சரியான நேரம்

நேற்று உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிந்து, 35,440 ரூபாய் எனக் குறைந்து விற்பனையாகிறது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து 4,430 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆக சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து 35,440 ரூபாய் என விற்பனையாகிறது.

24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு 4,794 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு 38,352 ரூபாய் என விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 35,616 ரூபாயாக இருந்தது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து 67.80 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிலோ வெள்ளிக்கு 100 ரூபாய் அதிகரித்து 67,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதையும் படிங்க: '6 மாதங்களில் முடிவடையும் கரோனா: தேசிய நோய் தடுப்புத்துறை தகவல்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.