விலை உயரும் சி.என்.ஜி: முக்கிய நகரங்களில் அக்டோபர் மாதத்தில் 11% வரை உயர வாய்ப்பு

author img

By

Published : Sep 12, 2021, 7:26 AM IST

CNG price may rise on October

அக்டோபர் மாதத்தில் வாகன எரிவாயு விலை 10 முதல் 11 விழுக்காடு வரை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சமையல் எரிவாயு விலை 76 விழுக்காடு வரை உயரும் அபாயம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி: வாகன எரிவாயு விலை அக்டோபர் மாதத்தில் உயரும் எனக் கூறப்படுகிறது.

வாகன எரிபொருள், சமையல் எரிவாயு விலை உயர்வினால் பொதுமக்கள் படும் இன்னல்கள் சொல்லி மாளாது. இதன் காரணமாக மக்கள் பெரும் விலைவாசி உயர்வையும் சந்தித்து வருகின்றனர்.

அனைத்துப் பொருள்களும் கிட்டத்தட்ட 100 மடங்கு அளவு விலை உயர்வைச் சந்தித்துள்ளன. இந்த நேரத்தில், இதுவரை குறைந்த விலையில் மக்கள் பயன்படுத்தி வரும் வாகன எரிபொருளான சி.என்.ஜியின் விலை அக்டோபர் மாதத்தில் 10 முதல் 11 விழுக்காடு வரை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல டெல்லி, மும்பை ஆகிய இந்தியாவின் முக்கிய நகரங்களில் சமையல் எரிவாயு விலை 76 விழுக்காடு வரை உயர வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

சி.என்.ஜி

சமையலுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயுவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தயாரிக்கப்படுவது தான் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் சி.என்.ஜி. பொதுவாக ஒவ்வொரு ஆறு மாத காலத்திற்குப் பிறகு இயற்கை எரிவாயுவின் விலை நிர்ணயம் இருக்கும்.

அதன்படி, அக்டோபர் ஒன்றாம் தேதி இதற்கான விலை நிர்ணயக் குழு கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் இயற்கை எரிவாயுவுக்கான விலை நிர்ணயம் செய்யப்படும். அரசின் பொதுத் துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி இதற்கான முடிவுகளை எடுக்கும்.

இதையும் படிங்க: ’கடைய தெறங்க... மத்தத அப்புறம் பாக்கலாம்’ - டெஸ்லாவுக்கு வலைவிரிக்கும் அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.