உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு செய்திச் சேனல் தொடக்கம்!

author img

By

Published : Mar 16, 2023, 2:34 PM IST

Etv Bharat

காட்சி மற்றும் செய்தித் துறை ஊழியர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உலகின் முதல் செய்ற்கை நுண்ணறிவு செய்திச் சேனல் தொடங்கப்பட்டு உள்ளது.

டெல்லி: உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு செய்திச் சேனல் தொடங்கப்பட்டு உள்ளது. அண்மைக் காலமாக செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI பல்வேறு துறைகளில் கோலோச்சத் தொடங்கி உள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவுத் துறையின் அபார வளர்ச்சியில் பல்துறை வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் நிலவுகிறது.

சாதரணமாக ஒரு பணியாள் ஒர் வேலையை முடிக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தை காட்டிலும் செயற்கை நுண்ணறிவு விநாடிகளில் அதை முடித்துக் காட்டுகிறது. பல்வேறு துறைகளில் கோலோச்சி வந்த செயற்கை நுண்ணறிவு தற்போது செய்தித் துறையையும் விட்டு வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் முதன் முதலாக எந்த துறை சார்பு இல்லாத முதல் செயற்கை நுண்ணறிவு செய்திச் சேனலான நியூஸ் ஜிபிடி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த முயற்சி செய்தி உலகில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என நியூஸ் ஜிபிடி தலைமை நிர்வாக அதிகாரி அலென் லெவி தெரிவித்து உள்ள்ளார்.

இது தொடர்பாக அலென் லெவி கூறுகையில், "நீண்ட காலமாக, செய்திச் சேனல்கள் அரசியல் அல்லது ஏதோ ஒன்றைச் சார்ந்த அறிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நியூஸ் ஜிபிடி மூலம், எந்த மறைக்கப்பட்ட நிகழ்ச்சிகளும், யார் சார்புகளும் இல்லாமல், உண்மைகளைய உண்மையாக பார்வையாளர்களுக்கு வழங்க முடியும். மேலும் எந்த சார்பும் இல்லாமல் செய்தியாளர்களும் இல்லாமல் செய்திகளை வழங்க முடியும்" என்று தெரிவித்தார்.

இயந்திரம் சார்ந்த அல்காரிதம் மற்றும் இயற்கையான மொழி செயலாக்க தொழில்நுட்பம் மூலம் இயங்கும் நியூஸ் ஜிபிடியால் உலகம் முழுவதும் நிகழும் செய்திகள் மற்றும் அரசு துறை அறிக்கைகள் உள்ளிட்டவற்றை உடனுக்குடன் ஸ்கேன் செய்து பார்வையாளர்களுக்கு துல்லியமாகவும், தெளிவாகவும் உடனுக்குடன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியூஸ் ஜிபிடி செய்திச் சேனல் 24 மணி நேரமும் இயங்க கூடிய அளவில் இருக்கும் என்றும் நடுநிலைத் தன்மையுடன் செய்திகளை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் சந்தாதாரர்களாக சேரும் அனைவருக்கும் உடனுக்குடன் செய்திகளை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டூ ள்ளாதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அமெரிக்க ராணுவத்தின் துணை அமைச்சராக இந்திய வம்சாவெளி தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.