கூகுளில் 10,000 பேர் திடீர் பணி நீக்கம்: காரணம் என்ன?

author img

By

Published : Nov 23, 2022, 8:41 PM IST

கூகுளில் 10,000 பேர் திடீர் பணி நீக்கம்

கூகுள் நிறுவனத்தில் தற்போது சுமார் 10,000 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா: ஐடி துறையால் இயங்கி வரும் இந்த உலகில் பல லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், தற்போது டெக் துறையில் பணி நீக்கம் செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வரிசையில் ட்விட்டர், மெட்டா, அமேசான்-யைத் தொடர்ந்து, தற்போது கூகுள் நிறுவனமும் பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்கு கிறிஸ்டோபர் ஹோன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது, 'மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதாக இங்கிலாந்து முதலீட்டாளர் கூறியுள்ளனர்.

ஆனால், தற்போது டெக் பெஹிமோத், கூகுள் தனது செயல்திறன் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் விளைவாக சுமார் 10,000 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது’ எனக்குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஹிந்துஸ்தான் டைம்ஸின், சகோதர ஊடகமான "live mint"ன் அறிக்கையின்படி, குறைந்த மதிப்பெண் பெற்ற ஊழியர்கள் ராஜினாமா செய்யும்படி கேட்கப்படுவார்கள் என்றும்; அதில் 6% பணியாளர்கள் அல்லது 10,000 பணியாளர்களை தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும்; முறைப்படி குறைவாக பணிபுரிந்தவர்களை அவர்களின் செயல்திறன் மற்றும் மதிப்பெண் மூலம் கணக்கெடுக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் அந்நிறுவனம், நிறுவனங்களின் மேலாளர்கள் பணியாளர்களுக்கு வழங்கப்படும் போனஸ் மற்றும் பங்குகள் போன்ற சலுகைகளைக் குறைக்க மதிப்பெண்களைப் பயன்படுத்தலாம் என்றும்; வரலாற்றுப் பணியமர்த்தல் முறைகளுடன் ஒப்பிடுகையில், நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை "அதிகமானது" என்றும், அது தற்போதைய வணிகச் சூழ்நிலையைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் ஹோன் கூறுகிறார்.

மேலும் கூகுளைப் போதுமான அளவு அதிக ஊதியம் பெறும் வல்லுநர்களைக் கொண்டு நிர்வகிக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.

இதையும் படிங்க: அரசு கேபிள் டிவி விவகாரம்: நடப்பது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.