ஜம்மு காஷ்மீரில் கடந்த இரு வாரங்களாக பயங்கரவாத தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. கடந்த 17ஆம் தேதி வான்போஹ் என்ற பகுதியில் பிகாரைச் சேர்ந்த இரு தொழிலாளர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்ததாக பாதுகாப்புப் படையினருக்கு துப்பு கிடைத்தது. இதையடுத்து அங்கு அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் வெடித்தது. இதில், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தளபதி குல்சார் அகமது ரேஷி, அடில் அகமது வானி ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர். இதை ஜம்மு காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் ட்விட்டரில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: லக்கிம்பூர் வழக்கு - உ.பி. அரசின் விசாரணையை விமர்சித்த உச்ச நீதிமன்றம்