எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்... பள்ளி மாணவனின் தற்கொலை கடிதம்...

author img

By

Published : Sep 23, 2022, 9:27 PM IST

Student dies by suicide after being thrashed by teacher in Rae Bareli

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்வில் காப்பி அடித்ததால் மாட்டிக்கொண்ட 7ஆம் வகுப்பு மாணவன், ஆசிரியர் அடித்ததால் தற்கொலை செய்துகொண்டான்.

ரேபரேலி: உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று (செப் 22) 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயிரியல் தேர்வு நடந்தது. அந்த தேர்வின்போது ராஜீவ் என்னும் மாணவன் காப்பி அடித்ததால் சிக்கினான். அதன்பின் ஆசிரியர் மாணவனை தாக்கியுள்ளார். இதனால் மாணவன் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் நள்ளிரவில் அந்த மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு கடிதம் ஒன்றையும் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், “பயாலஜி தேர்வின் போது காப்பி அடித்து மாட்டிக்கொண்டேன். அதற்காக ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டேன்.

ஆனால், அவர் என்னை மன்னிக்காமல், அனைவரது முன்னிலையிலும் அடித்தார். ஒருவர் தப்பு பண்ணுனா அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கணும். எனக்கு அது கிடைக்கல. ரொம்ப அழுதேன். இப்போது சாகப்போகிறேன். என் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: லாட்டரியால் வந்தது ரூ. 25 கோடி... போனது நிம்மதி... வேதனைப்படும் ஆட்டோ ஓட்டுநர்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.