குறுகிய கால அல்லது நீண்ட கால நிலையான வைப்பு(FD): உங்களுக்கு எது சிறந்தது?

author img

By

Published : Sep 20, 2022, 2:07 PM IST

குறுகிய கால அல்லது நீண்ட கால நிலையான வைப்பு(FD): உங்களுக்கு எது FD சிறந்தது?

பணம் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சரியான நேரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும் வகையில் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும். இதுகுறித்து வல்லுநர்கள் கூறுவதை காணலாம்.

ஹைதராபாத்: வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்(NBFC) மற்றும் கார்ப்பரேட்டுகள் தங்கள் வைப்பு விகிதங்களை திருத்தத் தொடங்கியுள்ளன. குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் நிதித் தேவைகளுக்காக குறுகிய கால வைப்புகளை அறிவிக்கத் தொடங்கின.

அதிக வட்டியைப் பெறுவதால், இவற்றைத் தேர்ந்தெடுக்கும்போது சில முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். கார்ப்பரேட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வதற்கு முன், கடன் மதிப்பீடுகளை சரிபார்க்க வேண்டியது அவசியம். குறைந்த ரிஸ்க் கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்தும் வட்டி ஒப்பீட்டளவில் குறைவு. குறைந்த மதிப்பீடுகளைக் கொண்ட நிறுவனங்கள் அதிக ஆபத்து காரணமாக அதிக வட்டி விகிதங்களை வழங்க முனைகின்றன.

எனவே, முதலீட்டாளர்கள் முதலில் கிரெடிட் ரேட்டிங் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் ஆஃப் இந்தியா லிமிடெட்(CRISIL), முதலீட்டுத் தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு (ICRA) மற்றும் கிரெடிட் அனாலிசிஸ் & ரிசர்ச் லிமிடெட்(CARE) போன்ற நிறுவனங்கள் வழங்கும் மதிப்பீடுகளை சரிபார்க்க வேண்டும்.

நல்ல மதிப்பீடுகளை கொண்ட வைப்புத்தொகை ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாகக் கருதப்படலாம். authentication, authorization, and accounting(AAA) என்னும் மதிப்பீடு பெற்றவை சற்று குறைவான வருமானத்தைத் தரும், ஆனால் பணம் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் வட்டி சரியான நேரத்தில் வரும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தற்போது வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். எனவே, நீண்ட கால வைப்புத் தொகையைத் தேர்வு செய்யாதீர்கள். இப்போதைக்கு குறுகிய கால வைப்புகளில் முதலீடு செய்யுங்கள். வட்டி விகிதங்களை சரிசெய்த பிறகு, உங்கள் இலக்குகளைப் பொறுத்து, நீண்ட கால வைப்புகளுக்கு மாறலாம்.

கார்ப்பரேட் டெபாசிட்டுகளில் கிடைக்கும் வட்டி மொத்த வருமானத்தில் சேர்க்கப்பட வேண்டும். அந்த அளவிற்கு, பொருந்தக்கூடிய அடிப்படையில் வரி செலுத்தப்பட வேண்டும். வட்டி 5,000 ரூபாய்க்கு மேல் இருக்கும்போது TDS பொருந்தும். எனவே, படிவம் 15G/15H ஐச் சமர்ப்பிப்பதன் மூலம் TDS ஐ நீக்கிவிடலாம்.

முதலீடுகளை பன்முகப்படுத்த விரும்புபவர்கள் இவற்றைப் பரிசீலிக்கலாம். இருப்பினும், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற விரும்புவோர் அந்தக் காலகட்டங்களுக்குள் வங்கி வைப்புகளைத் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் நாமினி வசதியைப் பெற மறக்காதீர்கள்.

சில சிறிய வங்கிகளும் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. எனவே, பெரிய வங்கிகள், சிறிய வங்கிகள் அல்லது கார்ப்பரேட் துறையில் முதலீடு செய்யலாமா என்பதை திட்டமிட்டு செயல்படுங்கள்.

இதையும் படிங்க: செகண்ட் ஹேண்ட் கார் வாங்க, விற்க புதிய விதிகள்... மத்திய அரசு அதிரடி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.