ETV Bharat / bharat

உக்ரைன் மீதான போரை தடுக்க உலக நாடுகள் முயற்சி..

author img

By

Published : Feb 26, 2022, 12:37 PM IST

ரஷ்யாவின் உக்ரைன் மீதான போரை தடுக்க உலக நாடுகள் முயற்சி..
ரஷ்யாவின் உக்ரைன் மீதான போரை தடுக்க உலக நாடுகள் முயற்சி..

ரஷ்ய உக்ரைன் இடையேயான போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், போரை தடுக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஹைதராபாத்: உக்ரைன் தலைநகரான கிவ் மீதான தாக்குதலை முறியடிக்க உக்ரைன் ராணுவம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் ரஷ்ய படைகள் நேற்று சற்று திணறியது. இதனிடையே உக்ரைன் மீதான போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் இந்த போரின் மூலம் இதில் பங்குபெறாத நாடுகளுக்கும் இழப்பு அதிகரிக்கும். இதனையடுத்து உலக முக்கிய தலைவர்களும் போரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. உலக நாடுகளின் முயற்சி வெற்றி பெற்றால் நன்மை பயக்கும் என கூறுகின்றனர்.

  1. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லக்ஸ்ம்பர்க்கின் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகள் கொண்ட குழு புடின் மற்றும் லாவ்ரோவின் சொத்துக்களை முடக்க முடிவு செய்து இருப்பது விரைவான முடிவாகும். மேலும் புடின் மற்றும் லாவ்ரோவின் பயணமும் தடை செய்யப்படும் எனத தெரிவித்தார்.
  2. ரஷ்யா கிரேமேலின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், நேட்டோ நாடுகளின் அணியில் உக்ரைன் சேராமல் இருப்பதற்கான பேச்சு வார்த்தைக்கு ரஷ்ய அதிபர் புடின் தயாராக இருப்பதாகத் தகவல் அளித்துள்ளார். இதன் மூலம் உக்ரைனின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் நிலைப்பாடு மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  3. ஜெர்மனி அதிபர் ஃப்ரான்க்-வால்டர் ரஷ்யா அதிபர் புடினிடம் முறையிடுகையில், “ இந்த பைத்தியக்காரதனத்தை (போர்)நிறுத்துங்கள்” என்றார். மேலும் ரஷ்யாவுடன் பகைமை பாராட்ட விரும்பவில்லை , இருப்பினும் இந்த தவறான போக்கிற்குத் தெளிவான பதிலடி இல்லாமல் முடியாது என கூறியுள்ளார்.
  4. போப் பிரான்சிஸ் ரஷ்யா தூதரகத்திற்கு நேற்று(பிப்ரவரி 25) சென்றார். அங்கு போர் குறித்து தனது தனிப்பட்ட கவலையைத் தெரிவித்தார். இது குறித்து வாடிகனின் செய்தி தொடர்பாளர் போப் போர் குறித்து மிகவும் கவலைப்படுவதாக கூறியுள்ளார்.
  5. உக்ரைனின் தலைநகரான கிவ்வில் புறநகர் விமான நிலையங்களை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் கிவ்வின் நீண்ட ஓடுபாதையைக் கொண்ட ஹோஸ்மோடாவில் உள்ள ஹெவி-லிவ்டிங் விமான நிலையத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் பட்சத்தில் ரஷ்யா ராணுவத்தின் விமானப் படைகளை கிவ்வில் இறக்க முடியும்.
  6. இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் உக்ரைனின் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமைட்ரோ குலேபாவிடம் உக்ரைன் நிலை குறித்து ஆலோசித்ததாகக் கூறினார். மேலும் இந்தியா தற்போதைய சூழலில் ராஜதந்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
  7. ரஷ்ய விமானங்களை இங்கிலாந்து தரையிறங்கத் தடை விதித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவின் வான் தளத்தை உபயோகிக்க இங்கிலாந்து விமானங்களுக்கு புடின் தடை விதித்துள்ளார்.

இதையும் படிங்க:புடின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.