காங்கிரஸ் எம்எல்ஏ தொழிற்சாலையில் கைப்பற்றப்பட்ட 7.5 கோடி ரூபாய் பணம்

author img

By

Published : Feb 22, 2021, 2:58 PM IST

Rs 7.5 cr cash recovered from Madhya Pradesh Cong MLA's factory

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவருக்கு சொந்தமான தொழிற்சாலையிலிருந்து ரூ.7.5 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணத்தினை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டம் சோலாப்பூர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ நிலய் தாகா, இவருக்கு சொந்தமான தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வீடுகள் உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 18ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பீடல், சத்னா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சோதனையின் போது, அவர் பல்வேறு தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த முதலீட்டில் ஹவாலா பணப்பரிவர்த்தணை நடைபெற்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சோலாப்பூரிலுள்ள எம்எல்ஏ நிலய் தாகாவிற்கு சொந்தமான ஒரு தொழிற்சாலையில், வருமான வரித்துறையினர் 7.5 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், பறிமுதல் பணத்தில் இவருக்கு ஏதேனும் தொடர்புள்ளதா என விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும், கங்கனா ரணாவத் வெளிப்படுத்தும் கருத்துக்களுக்கு எதிராக போராட்டத்தை நடத்தியதற்காகவும் இவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.