அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்... வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வங்கிகள்...!

author img

By

Published : Sep 19, 2022, 2:01 PM IST

Protect

சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால், ரிசர்வ் வங்கி மட்டுமல்லாமல் தனியார் வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

ஹைதராபாத்: டிஜிட்டல் உலகில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால், ரிசர்வ் வங்கி மட்டுமல்லாமல் ஒவ்வொரு தனியார் வங்கிகளும், தங்களது வாடிக்கையாளர்களை மோசடிகளில் இருந்து காப்பாற்றும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. பொதுமக்கள் ஏடிஎம் கார்டு சிவிவி, ஓடிபி எண், ஏடிஎம் பின் நம்பர் உள்ளிட்ட தகவல்களை பகிரக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. ரிசர்வ் வங்கி மட்டுமே இதுபோன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வந்த நிலையில், தனியார் வங்கிகளும் இப்போது தீவிரமாக விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளன.

ஆக்சிஸ் வங்கி, சைபர் குற்றங்கள் குறித்து தங்களது இணையதளத்திலும், ஏடிஎம் இயந்திரங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறது. டெபிட், கிரெடிட், யுபிஐ மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க தனி பொறிமுறையை அமைத்துள்ளதாக ஆக்சிஸ் வங்கி கூறுகிறது.

ஆர்பிஎல் வங்கி, RahoCyberSafe, Vigil Aunty உள்ளிட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் இணைய பாதுகாப்பை உறுதி செய்யும் காப்பீட்டு திட்டங்களை வழங்குகின்றன. இதன்மூலம், வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல் வங்கித் தகவல்கள் திருடப்பட்டு, பணம் மோசடி செய்யப்பட்டால், இழப்பீடு வழங்கப்படும். பல வங்கிகள் பாதுகாப்பான டிஜிட்டல் சேவைக்காக, ஓடிபிக்கு இரண்டடுக்கு பாதுகாப்பு வழங்குகின்றன. பொதுமக்கள் ஆன்லைன் சேவைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும், டிஜிட்டல் மோசடிகளில் சிக்கிக் கொள்ள கூடாது என்பதே இந்த பிரச்சாரங்களின் முக்கிய நோக்கம்.

இதையும் படிங்க: செகண்ட் ஹேண்ட் கார் வாங்க, விற்க புதிய விதிகள்... மத்திய அரசு அதிரடி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.