ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் போலீஸ் உயிரிழப்பு

author img

By

Published : Aug 14, 2022, 10:12 AM IST

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடந்த கையெறி குண்டு தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.

Etv Bharatஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் போலீஸ் உயிரிழப்பு
Etv Bharatஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் போலீஸ் உயிரிழப்பு

குல்காம்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள கைமோவில் நேற்று (ஆக. 13) பயங்கரவாதிகள் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தினர். இந்த கையெறி குண்டுத் தாக்குதலில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதில், உயிரிழந்த காவலர் பூஞ்ச் ​​மெந்தரைச் சேர்ந்த தாஹிர் கான் என்று உறுதியாகியுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த தாஹிர் கான், முதலில் சிகிச்சைக்காக அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து காஷ்மீர் மண்டல காவல் துறை, அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,“குல்காமின் கைமோவில் நேற்று இரவு கைக்குண்டு தாக்குதல் சம்பவம் நடந்தது. இந்த பயங்கரவாத சம்பவத்தில் பூஞ்ச் மெந்தரில் வசிக்கும் தாஹிர் கான் என்ற காவலர் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஆனந்த்நாக் ஜிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார், அங்கு அவர் உயிரிழந்தார்" என்று என பதிவிட்டுள்ளது.

  • A grenade incident was reported yesterday night in Qaimoh #Kulgam. In this #terror incident, 01 police personnel namely Tahir Khan R/O Mendhar, Poonch got injured. He was shifted to GMC hospital #Anantnag for treatment where he succumbed & attained #martyrdom.@JmuKmrPolice

    — Kashmir Zone Police (@KashmirPolice) August 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சில நாட்களுக்கு முன்பு, ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது இரு பயங்கரவாதிகள் அதிகாலையில் நடத்திய தாக்குதலில் நான்கு இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த இரண்டு தாக்குதலுக்கும் பாகிஸ்தானை தலைமயிடமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பைச் சேர்ந்தவர்கள் காரணமாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், கையெறி குண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நான்கு மணி நேர துப்பாக்கிச் சண்டையில் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இதற்கிடையில், காஷ்மீரில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரோன்கள், ஸ்னைப்பர்கள் மற்றும் சாதாரண உடையில் காவலர்கள் கண்காணிப்பு மற்றும் பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து நுபுர் சர்மாவை கொல்ல திட்டமிட்டவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.