'இந்தி கட்டாயம்' என்ற புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் உத்தரவுக்கு பாமக எதிர்ப்பு!

'இந்தி கட்டாயம்' என்ற புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் உத்தரவுக்கு பாமக எதிர்ப்பு!
இந்தி கட்டாயம் என்ற புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாக உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜிப்மர் மருத்துவமனை பதிவேடுகள் நகலைக்கிழித்து எறிந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் பாமக-வினர் 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயம் என்ற இயக்குநரின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் ஜிப்மர் மருத்துவமனையை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அரசை கண்டித்து கோஷம்: இந்த போராட்டத்தில் ஜிப்மர் பதிவேடுகளின் நகல்களைக் கிழித்து எறிந்து போராட்டத்தில் பாமகவினர் ஈடுபட்டனர். மேலும் பாமகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டு ஜிப்மர் நிர்வாகத்தையும் மத்திய அரசையும் கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். இதனையடுத்து சுமார் 250க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: இலங்கையில் தொடரும் மக்கள் போராட்டம்; திருகோணமலையில் தஞ்சமடைந்த ராஜபக்ச!
