காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை

author img

By

Published : Jan 30, 2022, 12:30 PM IST

Updated : Jan 30, 2022, 1:15 PM IST

காந்தியின் நினைவு நாள்

மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு நாளை முன்னிட்டு, அவருக்கு பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

டெல்லி: மகாத்மா காந்தியின் நினைவு நாளைக் குறிக்கும் விதமாகவும், நாட்டின் சுதந்திரத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 அன்று தியாகிகள் தினமாக இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது.

ஜனவரி 30, 1948 அன்று, பிர்லா இல்லத்தில் உள்ள காந்தி ஸ்மிருதியில் மகாத்மா காந்தி நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்டார். மத்திய அரசின் உத்தரவுப்படி, ஜனவரி 30ஆம் தேதி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது.

பிரதமர் மோடி மரியாதை

இந்நிலையில், மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு நாளான இன்று (ஜன. 30) பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், டெல்லி ராஜ்காட்டிலுள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பாபுவின் (மகாத்மா காந்தி) நினைவு நாளில், அவரை நினைவு கூர்கிறேன். அவரது உன்னத கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்துவது நமது கூட்டு முயற்சியாகும்.

  • Remembering Bapu on his Punya Tithi. It is our collective endeavour to further popularise his noble ideals.

    Today, on Martyrs’ Day, paying homage to all the greats who courageously safeguarded our nation. Their service and bravery will always be remembered.

    — Narendra Modi (@narendramodi) January 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இன்று, தியாகிகள் தினத்தில், நமது தேசத்தை துணிச்சலுடன் பாதுகாத்த அனைத்து மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களின் சேவையும், வீரமும் என்றென்றும் நினைவுகூரப்படும்" என்று பதிவுசெய்துள்ளார்.

அமித் ஷா, ராகுல் காந்தி அஞ்சலி

இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகாத்மா காந்திக்கு, தியாகிகள் தினத்தில் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மகாத்மா காந்தி ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் சுதேசி, தாய்மொழி மற்றும் தன்னாட்சி ஆகிய உணர்வுகளை விதைத்தார்.

  • महात्मा गांधी जी ने हर भारतीय के हृदय में स्वदेशी, स्वभाषा और स्वराज की अलख जगाई। उनके विचार और आदर्श सदैव हर भारतवासी को राष्ट्रसेवा के लिए प्रेरित करते रहेंगे।

    आज पूज्य बापू की पुण्यतिथि पर उन्हें नमन कर श्रद्धांजलि देता हूँ।

    — Amit Shah (@AmitShah) January 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அவரது எண்ணங்களும், லட்சியங்களும் ஒவ்வொரு இந்தியரையும் தேசத்திற்குச் சேவை செய்ய எப்போதும் ஊக்கமளிக்கும். இன்று, மதிப்பிற்குரிய பாபுவின் நினைவுநாளில், அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்" என பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க: இந்து- இஸ்லாமியர்களை விடுதலை போரில் இணைத்த டெல்லி ஜாமியா பள்ளிவாசல்!

Last Updated :Jan 30, 2022, 1:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.