அரசியலமைப்பு மீதான தாக்குதலைச் சகித்துக்கொள்ள முடியாது - மோடி

author img

By

Published : Nov 26, 2021, 11:48 AM IST

அரசியலமைப்பு நாள்

அரசியலமைப்பு நாளான இன்று (நவம்பர் 26) நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்துகையில், அரசியலமைப்பு மீதான தாக்குதலைச் சகித்துக்கொள்ள முடியாது என எச்சரிக்கைவிடுத்தார்.

டெல்லி: இந்திய அரசியலமைப்பு நாள் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி, பல்வேறு தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் தங்களது கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர்.

அரசியலமைப்பு நாளை முன்னிட்டு நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், "அரசியலமைப்பு மீதான தாக்குதலைச் சகித்துக்கொள்ள முடியாது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை அரசியலமைப்பு ஒருங்கிணைக்கிறது.

நமது அரசியலமைப்பு சட்டவிதிகள் மட்டுமின்றி பல பாரம்பரியங்களைக் கொண்டது. சில அரசியல் கட்சிகள் மக்களாட்சியின் (ஜனநாயக) மரபை மறந்து செயல்படுகின்றன" என்றார். இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொணடனர்.

இதையும் படிங்க: தேசிய தொழில் பயிற்சி திட்டம் ஐந்தாண்டு நீட்டிப்பு - ரூ.3,054 கோடி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.