குழந்தை கடத்தல்காரன் என நினைத்து சந்தேகத்திற்குரியவரைத் தாக்கிய ஊர்மக்கள் - பரிதாபமாக உயிரிழப்பு

குழந்தை கடத்தல்காரன் என நினைத்து சந்தேகத்திற்குரியவரைத் தாக்கிய ஊர்மக்கள் - பரிதாபமாக உயிரிழப்பு
அஸ்ஸாம் மாநிலத்தில் குழந்தை கடத்தல்காரன் என சந்தேகித்து பொதுமக்கள் தாக்கியதில், ஓர் அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம்(ஜொனாய்): அஸ்ஸாமில் பல்வேறு இடங்களில் குழந்தைக் கடத்தல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இந்நிலையில், தேமாஜி மாவட்டத்தில் குழந்தை கடத்தல்காரன் என்று சந்தேகித்து ஒருவரை பொதுமக்கள் தாக்கியதில், அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று(ஆக.31) ரகுத் கோகே கிராமத்தில், தூங்கிக் கொண்டிருந்த தாயிடமிருந்து ஓர் அடையாளம் தெரியாத நபர் குழந்தையைப் பறிக்க முயன்றுள்ளார். அதில் திடுக்கிட்டு எழுந்த தாயார் கூச்சலிட்டதும் அப்போது ஓடிய நபரைத் துரத்திய கிராம மக்கள் அவரை சரமாரியாகத் தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த அவரை காவல் துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், அந்த அடையாளம் தெரியாத நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த நபரின் அடையாளங்கள் தற்போது வரை தெரியாமலேயே உள்ளன. இதனையடுத்து, இதுகுறித்து அம்மாவட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நடப்பாண்டில் இந்தியாவின் ஜிடிபி சதவீதம் குறையும் என கணிப்பு..
