’என்னிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் பெருமளவு ஐஏஎஸ் அதிகாரி சிங்காலுடையது’- சுமன்

author img

By

Published : May 14, 2022, 7:29 AM IST

என்னிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் பெருமளவு ஐஏஎஸ் அதிகாரி சிங்காலுடையது’-அமலாகத்துறையிடம் கூறிய சுமன்

ராஞ்சியில் உள்ள பணமோசடி தடுப்பு நீதிமன்றத்தில் பட்டயக் கணக்காளர் சுமன் வெளிப்படுத்திய விவரங்கள் அடங்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை வியாழக்கிழமை சமர்ப்பித்தது. இதன்படி, ஐஏஎஸ் அதிகாரி சிங்கால் அறிவுறுத்தலின் பேரில், அவரது குடும்பத்திற்குச் சொந்தமான பல்ஸ் மருத்துவமனை நிலத்தை வாங்குவதற்காக ஒரு பெரிய பில்டருக்கு ரூ.3 கோடி ரொக்கம் கொடுத்ததாக சுமன்,அமலாக்கத்துறையிடம் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பணமோசடி தடுப்பு நீதிமன்றத்தில் பட்டயக் கணக்காளர் வெளிப்படுத்திய விவரங்கள் அடங்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை வியாழக்கிழமை சமர்பித்துள்ளது. பட்டயக் கணக்காளர் சுமன் குமார், விசாரணையின் போது, அமலாக்க இயக்குநரகத்தில் மே 6 அன்று மீட்டெடுத்த பணத்தின் பெரும்பகுதி ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்காலுடையது என்று கூறியுள்ளார்.

ராஞ்சியில் உள்ள பணமோசடி தடுப்பு நீதிமன்றத்தில் சுமன் வெளிப்படுத்திய விவரங்கள் அடங்கிய ஆவணங்களை அமலாக்கதுறை வியாழக்கிழமை சமர்ப்பித்தது. ராஞ்சியில் உள்ள அமலாக்க துறையின் அலுவலக உதவி இயக்குனர் வினோத் குமார், விசாரணை விவரங்களை நீதிமன்றத்தில் அளித்துள்ளார். இதன்படி, சிங்கால் அறிவுறுத்தலின் பேரில், அவரது குடும்பத்திற்குச் சொந்தமான பல்ஸ் மருத்துவமனை நிலத்தை வாங்குவதற்காக ஒரு பெரிய பில்டருக்கு ரூ.3 கோடி ரொக்கம் கொடுத்ததாக சுமன் அமலாக்கத்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அமலாக்கத்துறை விசாரணையில் குந்தி மற்றும் சத்ராவில் சிங்கால் டிசியாக நியமிக்கப்பட்டபோது, பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. பூஜா சிங்கால் மற்றும் அவரது கணவர் அபிஷேக் ஜா ஆகியோரின் வங்கி அறிக்கையின்படி, அமலாக்கத்துறையால் ஆய்வு செய்யப்பட்டதில், சிங்கால் டிசியாக பதவியேற்ற போது, சிங்கால் சம்பளத்தை விட அதிகமாக ரூ.1.43 கோடி அவரது கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. இந்த ஆதாரங்களை மேற்கோள் காட்டி, அமலாக்கத்துறை சிங்கலை 12 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: குறைந்த விலையில் தனியார் நிறுவனங்களிடம் ஆயில் கேட்கும் தமிழ்நாடு அரசு - தவறில்லை எனக் கூறும் உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.