குழந்தைகளோடு மனைவியை கொன்று புதைத்த ரயில்வே ஊழியர்
Updated on: Jan 23, 2023, 12:39 PM IST

குழந்தைகளோடு மனைவியை கொன்று புதைத்த ரயில்வே ஊழியர்
Updated on: Jan 23, 2023, 12:39 PM IST
மத்திய பிரதேசத்தில் இரண்டாவது மனைவியை 2 குழந்தைகளோடு கொன்று புதைத்த ரயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார்.
போபால்: மத்திய பிரதேச மாநிலம் ரத்லாம் பகுதியை சேர்ந்தவர் சோனு தல்வாடே. ரயில்வே ஊழியரான இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது 2ஆவது மனைவியுடன் ஏற்பட்ட தகராறின்போது அவரை கொலை செய்துள்ளார். அதன்பின் அவர்களது 2 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு 3 உடல்களையும் வீட்டின் பின்புறம் புதைத்துள்ளார்.
இதையடுத்து இயல்பாக வேலைக்கு சென்று வந்துள்ளார். அவரது மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என்பதால் சந்தாகமடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து சோனுவிடம் கேட்டுள்ளனர். ஆனால், அவர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பதிலை தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் ரத்லாம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் சோனு தல்வாடே இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில், மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்து நண்பரின் உதவியுடன் உடல்களை புதைத்ததை ஒப்புக் கொண்டார். அதனடிப்படையில் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்திற்குச் சென்ற போலீசார் தோண்டி அழுகிய நிலையில் இருந்த உடல்களை மீட்டு உடற்கூராய்வு செய்தனர். அவருக்கு உதவி நண்பர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: தங்கை மீது ஆசிட் வீசிய அக்கா.. வெளியான பகீர் காரணம்?
