"பாலஸ்தீனத்தின் மீது குண்டு போட வேண்டாம்!" மைதானத்திற்குள் நுழைந்த இளைஞர்!

"பாலஸ்தீனத்தின் மீது குண்டு போட வேண்டாம்!" மைதானத்திற்குள் நுழைந்த இளைஞர்!
Man invades pitch World Cup Cricket 2023 final : உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பேட்டிங் செய்த போது பாதுகாப்பு தடுப்புகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
அகமதாபாத் : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் மற்றும் அரைஇறுதி சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், இன்று (நவ. 19) கிளைமாக்ஸ் காட்சி அரங்கேற்றம் நடைபெறுகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி நடைபெறுகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான சூழலே நிலவியது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் தடுமாறி வருகின்றனர். ரோகித் சர்மா, விராட் கோலி தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி கடும் நெருக்கடிக்கு உள்ளானது.
முன்னதாக விராட் கோலி விளையாடிக் கொண்டு இருந்த போது பாதுகாப்பு தடுப்புகளை மீறி இளைஞர் மைதானத்திற்குள் நுழைந்தார். விறுவிறுவென மைதானத்திற்குள் நுழைந்த இளைஞர் நேராக விராட் கோலி நோக்கி ஓடிச் சென்று அவரை பிடித்துக் கொண்டார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் இளைஞரை மீட்டு வெளியே அழைத்துச் சென்றனர்.
பாலஸ்தீனத்தில் குண்டு மழைபொழிய வேண்டாம் என்ற கருப்பொருள் அடங்கிய கருத்துகளை தனது டி சர்ட்டில் அந்த இளைஞர் பொறித்து இருந்தார். மேலும் பாலஸ்தீன நாட்டின் தேசிய கொடியை தனது கையில் இளைஞர் வைத்து இருந்தார். அந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
"You make us proud!"🖋
— ICC (@ICC) November 19, 2023
Sachin Tendulkar gifts Virat Kohli his signed jersey ahead of the #CWC23 Final 🫶🥲#INDvAUS pic.twitter.com/ggT6uzJ3fA
போட்டியின் நடுவே பாதுகாப்பு தடுப்புகளை மீறி இளைஞர் மைதானத்திற்குள் புகுந்த சம்பவம் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிக் கொண்டு இருந்த போது ஜார்வோ என்ற யூடியூபர் திடீரென மைதானத்திற்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மைதானத்திற்குள் புகுந்த ஆட்டத்தின் இடையே இடையூறு ஏற்படுத்துவதையே வாடிக்கையாக கொண்டு இருந்த ஜார்வோவை பிடித்த போலீசார் அவர்து விசாவை ரத்து செய்து அவரது சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பி வைத்தனர்.
