ETV Bharat / bharat

'என்னுடன் செல்ஃபி எடுக்க 100 ரூபாய் தரணும்' - ம.பி., அமைச்சர் அறிவிப்பு

author img

By

Published : Jul 18, 2021, 8:26 PM IST

என்னுடன் செல்ஃபி எடுக்க, 100 ரூபாய் தர வேண்டுமென மத்தியப்பிரதேச அமைச்சர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

http://10.10.50.90:6060///finaloutc/english-nle/finalout/18-July-2021/12497740_pw.mp4
மத்திய பிரதேச அமைச்சர்

போபால்: மத்தியப் பிரதேச சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர், தன்னுடன் செல்ஃபி எடுக்கிறவர்கள், 100 ரூபாய் தரவேண்டும் எனக் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பணம், கட்சி நிதிக்குச் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, காண்ட்வா மாவட்டத்திற்கு அமைச்சர் உஷா தாக்கூர் சென்றபோது, ​​முகக்கவசத்திற்கு பதிலாக காமாச்சா (சால்வை) பயன்படுத்துவதைக் காண முடிந்தது.

தினமும் இரண்டு யாகங்கள்

இதுகுறித்து அவரிடம் கேள்வி கேட்டபோது, "நான் சிறுவயதிலிருந்தே வேத முறையைப் பின்பற்றி வாழ்ந்து வருகிறேன். என் வீட்டில் ஒரு நாளைக்கு இரண்டு முறை அக்னிஹோத்ரா யாகம் செய்யப்படுகிறது.

Madhya Pradesh Minister
மத்தியப் பிரதேச சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் உஷா தாக்கூர்

இதுமட்டுமின்றி, தினந்தோறும் சங்கை ஊதுகிறேன். யாகம் செய்வதன் மூலம் ஒருவரின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இந்த முறைகளைக் கடைப்பிடிப்பவர் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பர்.

கோவிட்-19 வைரஸிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள காமாச்சாவைப் பயன்படுத்துகிறேன். மக்கள் அனைவரும் கரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணியுங்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'பாஜகவுடன் கூட்டு வையுங்கள்' சரத் பவாருக்கு அத்வாலே அழைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.