காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பண்டிட்டின் இறுதிச்சடங்கு
Updated on: May 13, 2022, 1:29 PM IST

காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பண்டிட்டின் இறுதிச்சடங்கு
Updated on: May 13, 2022, 1:29 PM IST
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அரசு ஊழியரின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதனிடையே காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பண்டிட் சமுதாயத்தினர் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த அரசு ஊழியர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது இறுதி சடங்கு இன்று (மே 13) நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் உள்ள சடூரா தாலுகா அலுவலகத்தில் நேற்று (மே 12) 2 தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில், ராகுல் பட் என்ற ஊழியர் கொல்லப்பட்டார். இந்த ஊழியர் காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர். அவரது இறுதிச்சடங்கு இன்று (மே 13) பந்தலாப்பில் நடைபெற்றது. அப்போது ஏடிஜிபி முகேஷ் சிங் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனிடையே ராகுல்பட் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பண்டிட் மக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மைகாலமாக, காஷ்மீரில் பண்டித் சமூகத்தினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காஷ்மீரில் தீவிரவாதிகளால் பண்டிட் சுட்டுக்கொலை
