ETV Bharat / bharat

சிறுவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை: ஜான்சன் & ஜான்சன் விண்ணப்பம்

author img

By

Published : Aug 20, 2021, 2:45 PM IST

இந்தியாவில் 12 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை நடத்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், மத்திய மருந்து தர நிலை கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.

Johnson & Johnson
Johnson & Johnson

டெல்லி: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வாக கருதப்படுகிறது. அதனால், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் மும்முரமாக உள்ளன. தற்போதுவரை ஸ்புட்னிக் வி, மார்டனா, கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய நான்கு கரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதனிடையே, அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், அதன் ஒரு தவணை தடுப்பூசிக்கு அனுமதி வழங்குமாறு ஒன்றிய அரசிடம் ஆகஸ்ட் 6ஆம் தேதி விண்ணப்பித்தது. அதையடுத்து ஆகஸ்ட் 7ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று அந்த நிறுவனம் இந்தியாவில் 12 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை நடத்த அனுமதிக் கோரி மத்திய மருந்து தர நிலை கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பத்துள்ளது.

இதையும் படிங்க: கோவிட் தடுப்பூசிக்கு அனுமதி கோரி ஜான்சன் அண்ட் ஜான்சன் விண்ணப்பம்!

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "குழந்தைகள் உள்பட அனைத்து வயதினரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமானது.

இந்தியாவில் ஜான்சன் & ஜான்சன் சிங்கிள் டோஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், 12 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை நடத்த ஒன்றிய மருந்து தர நிலை கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி கோரியுள்ளோம். கரோனாவிற்கு எதிரான முயற்சியில், இது ஒரு முக்கியமான படியாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 64 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை எண்ணிக்கை 50 கோடியை கடந்துள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தும் விகிதத்தை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

ஜான்சன் & ஜான்சன் சிங்கில் டோஸ் தடுப்பூசி

  • இந்தியாவில் புழக்கத்தில் உள்ள கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி, மாடர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு இரண்டு டோஸ் செலுத்த வேண்டும். ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை ஒரு டோஸ் செலுத்தினால் போதும்.
  • இந்தியாவில் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பயாலஜிக்கல்-இ நிறுவனத்துடன் இணைந்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் இந்தியாவில் இந்தத் தடுப்பூசியை தயாரித்து விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
  • முதலில் அமெக்காவில் இந்தத் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதையடுத்து தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ரத்தம் உறைதல் உள்ளிட்ட கோளாறு ஏற்பட்டதால், அனுமதி மறுக்கப்பட்டது.
  • பின்னர் மருத்துகளின் வேதிபொருளில் மாற்றம் செய்து ரத்த உறைதல் கோளாறுகள் கட்டுப்படுத்தப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது.
  • கனடா, ஆப்பிரிக்கா, பிரேசில் நாடுகளில் நடத்திய பரிசோதனையில், கரோனாவால் மோசமான உடல்நலக் குறைவு ஏற்படாமல் பாதுகாப்பதில் 85 விழுக்காடு செயல் திறன் கொண்டாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சிங்கிள் டோஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.