நிருபராக மாறி பாழடைந்த பள்ளியை தோலுரித்த 6ஆம் வகுப்பு மாணவன் - 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

author img

By

Published : Aug 6, 2022, 5:16 PM IST

Updated : Aug 6, 2022, 7:23 PM IST

நிருபராக மாறி பாழடைந்த பள்ளியை தோலுரித்த 6ஆம் வகுப்பு மாணவன்

ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன், தொலைக்காட்சி செய்தியாளரைப் போன்ற தொனியில் பாழடைந்த தனது பள்ளி குறித்து வெளியிட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து, அப்பள்ளியின் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஞ்சி: ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறையில் ஒரு மாணவனை என்ன வேண்டுமானாலும் செய்யத் தூண்டும். அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆறாம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவன், தனது வகுப்பறையில் ஆசிரியர் இல்லாதபோது செய்த செயல் தற்போது இணையம் எங்கும் வைரலாகி வருகிறது.

செய்தியாளரான சிறுவன்: பாழடைந்த தனது பள்ளி வளாகத்தை அச்சிறுவன் ஒரு செய்தியாளரை போன்ற தொனியில் விவரிக்கிறார். பச்சை கலர் டீ-சர்ட்டு, கட்டம் போட்ட லுங்கி அணிந்த அந்த சிறுவன் காலியான பிளாஸ்டிக் பாட்டிலை குச்சி ஒன்றை சொருகி மைக்காக பயன்படுத்தி தனது பள்ளியின் கவலைக்கிடமான நிலை குறித்து கேமரா முன்பு நேயர்களிடம் விளக்குகிறார். அந்த சிறுவன் ஜார்க்கண்டின் கோடா மாவட்டத்தின் பிகியாசக் கிராமத்தின் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்றுவரும், சர்ஃபராஸ் கான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நிருபராக மாறி பாழடைந்த பள்ளியை தோலுரித்த 6ஆம் வகுப்பு மாணவன் - 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

முதலில், காலியான வகுப்பறைக்குள் நுழையும் அந்த சிறுவன், அங்கிருந்த இரண்டு சக மாணவர்களிடம், 'ஏன் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை" என்று கேள்வியெழுப்புகிறார். அதற்கு, ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை என்பதால்தான் என்று பதிலளிக்கிறார்கள். தொடர்ந்து, பள்ளி முழுவதும் செல்லும் அந்த சிறுவன், மோசமான கழிப்பறை, பயன்பாட்டில் இல்லாத குடிநீர் கிணறு ஆகியவற்றை நம்மிடம் காண்பிக்கிறார்.

'தூய்மை இந்தியா...?': மேலும், அசுத்தமான கழிப்பறையை சுட்டிக்காட்டி மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தையும் கேள்விக்குட்படுத்துகிறார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, உள்ளூர் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், மாவட்ட கல்வி ஆணையர் ரஜினி குமாரி, அப்பள்ளியின் இரண்டு ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளார். தொடர்ந்து, அப்பள்ளியின் பரிதாபகரமான நிலைக்கு காரணமான அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நிருபராக மாறிய சிறுவன்; சேட்டை வீடியோ வைரல்

Last Updated :Aug 6, 2022, 7:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.