நாட்டில் புதிதாக 18,987 பேருக்கு கரோனா

author img

By

Published : Oct 14, 2021, 1:13 PM IST

covid tracker  Coronavirus  India  Union Health Ministry  Kerala  india count  கரோனா  கரோனா பரவல்  கரோனா பாதிப்பு  கரோனா தொற்று  கரோனா நிலவரம்  இந்தியா கரோனா நிலவரம்  கரோனா எண்ணிக்கை  இந்திய கரோனா எண்ணிக்கை

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 987 பேர் கரோனா தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி: நாட்டில் ஒரே நாளில் 18 ஆயிரத்து 987 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு மூன்று கோடியே 40 லட்சத்து 20 ஆயிரத்து 730 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கேரளத்தில் மட்டும் 11 ஆயிரத்து 79 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 246 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்புகள் நான்கு லட்சத்து 51 ஆயிரத்து 435 ஆக உள்ளது.

கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 808 ஆக உள்ளது. இதனால் குணமடைந்தோரின் மொத்த என்ணிக்கை மூன்று கோடியே 33 லட்சத்து 62 ஆயிரத்து 709ஆக உள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

கடந்த 24 மணி நேரத்தில் 35 லட்சத்து 66 ஆயிரத்து 347 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் இதுவரை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 96 கோடியே 82 லட்சத்து 20 ஆயிரத்து 997 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சத்து 85 ஆயிரத்து 706 நபர்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 93 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் அன்பில் மகேஷ் திருப்பதியில் சாமி தரிசனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.