Gyanvapi mosque: வாரணாசி ஞானவாபி மசூதியில் ஆய்வு!

Gyanvapi mosque: வாரணாசி ஞானவாபி மசூதியில் ஆய்வு!
Gyanvapi mosque: வாரணாசி ஞானவாபி மசூதியில் ஆய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன.
வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி மாவட்டத்தில் ஞானவாபி மசூதி (Gyanvapi mosque) அமைந்துள்ளது. இந்த மசூதியை இரு தரப்பினர் சொந்தம் கொண்டாடிவருகின்றனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அஜய் மிஸ்ரா என்பவர் தலைமையில் அகழாய்வு பணிகள் செய்ய உத்தரவு பிறப்பித்தது.
தற்போது இந்தக் குழுவில் புதிதாக இரு வழக்குரைர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று ஆய்வைத் தொடங்கினர்.
இந்த நிலையில் ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தங்களுடைய வரலாற்று சிறப்பு மசூதி என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: ஞானவாபி மசூதிக்குள் கள ஆய்வு நடத்த இஸ்லாமியர்கள் எதிர்ப்பு - திரும்பிச் சென்ற நீதிமன்ற குழு!
