ETV Bharat / bharat

திறக்கப்பட்டது ராமோஜி பிலிம் சிட்டி - சுற்றுலாப் பயணிகளுக்கு பிரமாண்ட வரவேற்பு

author img

By

Published : Oct 8, 2021, 7:30 PM IST

Updated : Oct 9, 2021, 11:12 AM IST

கரோனா பொது முடக்கத்திற்குப்பின் ராமோஜி பிலிம் சிட்டி பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

ராமோஜி பிலிம் சிட்டி
ராமோஜி பிலிம் சிட்டி

உலகின் மிகப்பெரிய பிலிம் சிட்டியான, ராமோஜி பிலிம் சிட்டி, சுற்றுலாப்பயணிகளுக்கு விருந்து படைக்கும் வகையில் இன்று (அக்டோபர் 8ஆம் தேதி) மீண்டும் தனது கதவுகளைத் திறந்துள்ளது.

திறக்கப்பட்ட முதல்நாளன்று வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகளுக்கு மிகச் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. அதேவேளை, கோவிட்-19 விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டன.

திறக்கப்பட்டது ராமோஜி பிலிம் சிட்டி
திறக்கப்பட்டது ராமோஜி பிலிம் சிட்டி
பொது முடக்கம் காரணமாக பல மாதங்கள் பயணத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் சுற்றுலாப் பயணிகள் ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள திரைப்பட அரங்குகள், கண்கவர் காட்சிகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
திறக்கப்பட்டது ராமோஜி பிலிம் சிட்டி
திறக்கப்பட்டது ராமோஜி பிலிம் சிட்டி

மக்களிடையே ஈர்ப்பு இன்னும் குறையவில்லை

திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தது, ராமோஜி பிலிம் சிட்டி மீதான ஈர்ப்பு மக்களிடையே இன்னும் குறையவில்லை என்பதை நிரூபித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு பிரமாண்ட வரவேற்பு

பெருந்தொற்று குறித்த அச்சம் மெல்ல மறைந்து வந்தாலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் ராமோஜி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

பிரமாண்ட பிலிம்சிட்டை கண்டுகளிக்கும் ஜோடி
பிரமாண்ட பிலிம்சிட்டை கண்டுகளிக்கும் ஜோடி

அனைத்து இடங்களும் தொடர்ந்து தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. தனிநபர் இடைவெளி கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் உதவிக்காக சிறப்பு பயிற்சிப் பெற்ற பாதுகாப்பு அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மீண்டும் தொடங்கியுள்ளன

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகப் பல மாதங்கள் பிலிம் சிட்டி மூடப்பட்டிருந்த நிலையில், பல்வேறு கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. நேரடி நடனங்கள், வைல்ட் வெஸ்ட் ஸ்டன்ட் ஷோ, பிளாக் லைட் ஷோ எனப்படும் அனிமேஷன் ஷோ மற்றும் மேடை நிகழ்ச்சிகள் அனைத்தும் மீண்டும் தொடங்கியுள்ளன.

குதிரை ராட்டினத்தில் குதுகளிக்கும் கிட்ஸ்
குதிரை ராட்டினத்தில் குதுகளிக்கும் கிட்ஸ்

குழந்தைகளுக்கான பிரத்யேக விளையாட்டு மையங்கள் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளன. மாபெரும் பரமபத விளையாட்டு, அரிய வகை பறவைகளைக் கொண்ட பறவைப் பூங்கா, வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்டவை பார்வையாளர்களின் வருகைக்கு தயாராகவுள்ளன.

ராமோஜி பிலிம் சிட்டி
ராமோஜி பிலிம் சிட்டி

பாகுபலி கண்டு ரசிப்பதற்காக

வரலாற்றுச் சின்னங்களின் மாதிரிகள், சுற்றுலாப் பயணிகளுக்கு பிரத்யேக சிறப்புப் பேருந்துகள் மூலம் சுற்றிக்காட்டப்படுகின்றன. புகழ்பெற்ற பாகுபலி படத்தின் அரங்குகள் பார்வையாளர்கள் கண்டு ரசிப்பதற்காக இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

ஹைதராபாத் வரும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்குரிய இடமான ராமோஜி பிலிம் சிட்டியை அனைவரும் நிச்சயம் வந்து பார்த்து மகிழ வேண்டும்.

இதையும் படிங்க: 'இந்தியா 75' - புதிய வடிவில் வெளியான 'மிலே சுர் மேரா துமாரா' பாடல்

Last Updated : Oct 9, 2021, 11:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.