பாதிரியார் பிரான்கோ முல்லக்கல் வழக்கில் 287 பக்க தீர்ப்பு சொல்வதென்ன?

author img

By

Published : Jan 15, 2022, 2:37 PM IST

பாதிரியார் பிரான்கோ முல்லக்கல் விடுதலை

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார் பிரான்கோ முல்லக்கலை விடுதலை செய்து கோட்டயம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோட்டயம் (கேரளா): கேரள மாநிலம் கோட்டயம் குருவிலாங்காட்டில் உள்ள திருச்சபையைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாதிரியார் பிரான்கோ முல்லக்கல் மீது கடந்த 2018ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், 2014 மற்றும் 2016க்கு இடைப்பட்ட காலத்தில் முல்லக்கல் தன்னை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகார் குறித்து கோட்டயம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று(ஜன.14) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி ஜி. கோபகுமார் வழங்கிய 287 பக்க தீர்ப்பில், "பாதிரியார் பிரான்கோ முல்லக்கல் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. கன்னியாஸ்திரியின் வாக்குமூலம் நம்பத் தகுந்ததாக இல்லை. அதில், முரண்பாடு உள்ளது. அறிவியல் பூர்வமான ஆதாரங்களை முன்வைக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிரியார் விடுதலை

இதையடுத்து, கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் வழக்கிலிருந்து பாதிரியார் பிரான்கோ முல்லக்கலை விடுவித்த கோட்டயம் கூடுதல் அமர்வு நீதிமன்றம், கன்னியாஸ்திரிகளிடையே உள்ள விரோதப் போக்கும், அதிகாரப் பேராசையும் இந்த வழக்கில் தெளிவாகத் தெரிகிறது என நீதிபதி வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பிக்கு பின் செய்தியாளர்களிடையே பேசிய பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக இருக்கும் மற்றொரு கன்னியாஸ்திரி, "நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. எங்களுடைய சிஸ்டருக்கு (கன்னியாஸ்திரி) நியாயம் கிடைக்கும்வரை நாங்கள் போராடுவோம். இதற்கு முன்னரும் எங்களுக்குத் தொல்லை கொடுத்தார்கள், இனியும் கொடுப்பார்கள். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் இறுதிவரை எங்கள் சிஸ்டருடன் உறுதுணையாக இருப்போம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ARMY DAY: இந்திய ராணுவம் வெளியிட்ட மிரட்டல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.