ஃபேஸ்புக் இந்தியாவின் பொதுக்கொள்கை இயக்குநராக முன்னாள் ஐஏஎஸ் நியமனம்

author img

By

Published : Sep 20, 2021, 12:04 PM IST

Facebook India appoints former IAS officer Rajiv Aggarwal as Head of Public Policy

ஃபேஸ்புக் இந்தியாவின் பொதுக்கொள்கை இயக்குநராக முன்னாள் ஐஏஎஸ் அலுவலரும், ஊபர் நிறுவனத்தின் தெற்காசிய மற்றும் இந்தியாவின் பொதுக்கொள்கையின் தலைவராகவும் இருந்த ராஜிவ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி: வலதுசாரிகளின் வெறுப்பு பரப்புரைக்கு ஆதரவாக இருந்ததாக ஃபேஸ்புக் இந்தியாவின் பொதுக்கொள்கை இயக்குநராக இருந்த அங்கீதா தாஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து, விசாரணை நடத்த ஃபேஸ்புக் நிறுவனம் ஆயத்தமானபோது, அங்கீதா தாஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தப் பதவியில், தற்போது, முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் ராஜிவ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஃபேஸ்புக் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஃபேஸ்புக்கின் பயனர்களின் பாதுகாப்பு, தரவுப் பாதுகாப்பு, தனியுரிமை, இணைய நிர்வாகம் உள்ளிட்டவற்றின் கொள்கையை மேம்படுத்தும் வகையில் ராஜிவ் அகர்வால் செயல்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.

26 ஆண்டு காலம் ஐஏஎஸ் அலுவலராகப் பணியாற்றிய அவர், ஒன்பது மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். இந்தியாவில் முதல்முறையாக அமைக்கப்பட்ட, அறிவுசார் சொத்துடைமை குறித்த தேசிய கொள்கைக் குழுவின் செயலராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

அமெரிக்கா- இந்தியா இடையேயான வர்த்தக மன்றத்துடன் நெருங்கிய தொடர்பும் வைத்து பணியாற்றியவர். ஃபேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் இவரது நியமனம் குறித்து பேசுகையில், "இந்தியாவின் கட்டமைப்பில் ஆழமாக மூழ்கியுள்ளோம் என்பதை நாங்கள் உணர்கிறோம்.

நாட்டில் உள்ள அனைவருக்கும் பயனளிக்கும், பாதுகாப்பான இணையத்தை உருவாக்க எங்களுக்கு அவர் உதவ வாய்ப்பு உள்ளது. பொதுக் கொள்கைக் குழுவை வழிநடத்த ராஜிவ் எங்களுடன் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தொழில்முனைவோருக்கு ரூ.50 லட்சம் வரை கடன் - பேஸ்புக் புதுத்திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.