ETV Bharat / bharat

டெல்லியில் கடும் பனிமூட்டம் : ரயில்கள் தாமதம்

டெல்லியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

Dense
Dense
author img

By

Published : Dec 20, 2022, 12:30 PM IST

டெல்லி: பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, ஹிமாச்சலப் பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு அடர்ந்த மூடுபனி காணப்படும் என நேற்று(டிச.19) இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி தலைநகர் டெல்லியில் இன்று(டிச.20) காலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. அருகில் இருப்பவர்கள்கூட கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு அடத்தியான மூடுபனி நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

சில இடங்களில் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடும் பனி காரணமாக, டெல்லியில் 11 ரயில்கள் ஒரு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டதாக தெரிகிறது. இதேபோல் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளிலும் இன்று அடர்த்தியான பனிமூட்டம் காணப்பட்டது.

இதையும் படிங்க: வீடியோ: குளு குளு காஷ்மீரில் ஹவுஸ்ஃபுலான ஹோட்டல்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.