டெல்லி கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27ஆக உயர்வு,  நிவாரணம் அறிவிப்பு

author img

By

Published : May 14, 2022, 7:12 AM IST

Updated : May 14, 2022, 7:21 AM IST

டெல்லி கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27ஆக உயர்வு, பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

டெல்லி வணிக கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: தலைநகர் டெல்லியின் புறநகர் முண்ட்கா பகுதியிலுள்ள சேமிப்புக் கிடங்கில் நேற்று(மே 13) மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற 16-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்தில் காயம் அடைந்த 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில், "மாலை 4 மணிக்கு மேல் அந்த பகுதியில் தீ விபத்து நடந்துள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்" என தெரிவித்தார்.

இதனிடையே தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்துள்ளனர். மேலும் டெல்லி வணிக கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்குப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திருச்சி தனியார் ஹோட்டலில் தீ விபத்து

Last Updated :May 14, 2022, 7:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.