இன்றைய ராசிபலன் - நவம்பர் 6

author img

By

Published : Nov 6, 2021, 6:16 AM IST

ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை12 ராசிகளுக்கான பலன்களை காண்போம்.

மேஷம்

உங்களது வாழ்க்கையில் உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். ஏதேனும் புதிய இடங்களுக்குச் செல்ல தயாராக இருக்கவும். ஏதேனும் ஒரு பணியில் மனம் லயித்து வேலை செய்யவும். அதற்காக அளவுக்கு அதிகமான வகையில் வேலை செய்யக் கூடாது. குழு நடவடிக்கைகளில் அனைவரது கவனமும் உங்கள் பக்கம் இருக்கும்.

ரிஷபம்

இன்று, உங்களது கவனம் உங்களது தனிப்பட்ட நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது இருக்கும். அவர்களுடனான உங்கள் ஆத்மார்த்தமான உறவுகள் மூலம் மனதை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று முழுவதும் அவர்களது எண்ணங்களே உங்கள் மனதில் நிறைந்திருக்கும்.

மிதுனம்

இன்று, நீங்கள் நெடுநாட்களாக ஏற்படுத்த விரும்பிய குடும்பத்தினரின் சந்திப்பை, உங்கள் வீட்டில் இன்று ஏற்பாடு செய்யக் கூடும். இன்றைய தினம் அதற்கு ஏற்ற நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினரை மட்டுமல்லாமல், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் முக்கிய வர்த்தக கூட்டாளிகள் ஆகியோரையும் நீங்கள் அழைத்து விருந்து அளிக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையும் இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்.

கடகம்

இன்றைய பொழுது, உற்சாகத்துடன் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. உங்களது உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியை, யாராலும் தடுக்க முடியாது. நீங்கள் செல்லும் இடத்திலும், மக்களை உற்சாகப்படுத்துவீர்கள். எனினும், மனதிற்கு வருத்தம் அளிக்க கூடிய கெட்ட செய்தி வரும் வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம் ஏற்பட்டால், அமைதியாக ஓய்வெடுத்துக் கொள்ளவும். இன்றைய நாளின் முடிவில், அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.

சிம்மம்

அலுவலகத்தில் பதவி உயர்வை அடைய, உங்கள் வேலையின் மீதும், வேலைகளை செயல்படுத்தும் உத்தியின் மீதும், நீங்கள் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். கூடுதல் வேலைகளையும் நீங்கள் மேற்கொள்வீர்கள். இதற்கான பலன்கள் உடனடியாக கிடைக்காவிட்டாலும், வருங்காலத்தில் இதற்கான பலன்களை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். உங்கள் தனிப்பட்ட உறவுகளைப் பொறுத்தவரை, குறிப்பிட்டு சொல்லும்படியான விஷயங்கள் எதுவும் நடைபெறும் வாய்ப்பு இல்லை.

கன்னி

உங்களது குறிக்கோள்கள் மற்றும் அதிக அளவிலான வேலைகளை எடுத்துக் கொள்வதற்கான உங்களது ஆர்வம் ஆகியவை இன்று அதிகம் இருக்கும். இன்றைய கடும் உழைப்பிற்குப் பிறகு, புத்துணர்ச்சி பெற, தனிப்பட்ட விருந்து, சமூக நிகழ்ச்சிகள் அல்லது திருமண விருந்து ஆகியவற்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.

துலாம்

ஒத்த எண்ணங்களை உடைய மக்களை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் அவர்களுடன், சிறந்த வகையில் பயனுள்ள ஆலோசனைகளை நடத்த முடியும். இதனால் உலகம் குறித்த உங்களது அறிவு விரிவடையும். உங்கள் முயற்சிகளில் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களை பொருத்தவரை, வாழ்க்கையில் காதலும் ஈடுபாடும் அதிகம் இருக்கும். இன்றைய நாளை திட்டமிடும்போது, வாழ்க்கையில் நீங்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். இதில் தவறு ஏதும் இல்லை, உங்களது எல்லை என்ன என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

தனுசு

இன்று நீங்கள் முழுமையாக நடுநிலையுடன் செயல்படுவீர்கள், ஒரு குடும்ப உறுப்பினராக, நீங்கள் பணியில் கவனம் செலுத்தி, வீட்டின் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு நடுநிலையாக செயல்படுவீர்கள். பணியிடத்தில் வேலைப்பளு சிறிது குறைவாகவே இருக்கும். மாலையில் நீங்கள் இனிமையாக நேரத்தைக் கழிக்கும் வாய்ப்பு உள்ளது.

மகரம்

உங்களது அபரிதமான பேச்சாற்றல் காரணமாக, உங்களை சுற்றி இருப்பவர்களை, நீங்கள் உங்கள் வசம் கொண்டு வருவீர்கள். எனினும் நீங்கள் இந்த திறமையை மேலும் வளர்த்துக் கொள்வது நல்லது. பிரச்சனைகளின் ஆணி வேர் வரை சென்று ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை கண்டுபிடிப்பீர்கள்.

கும்பம்

இன்று நீங்கள் புதை மணலில் சிக்கிக் கொண்டதைப் போலவும். எங்களை காப்பாற்ற யாரும் இல்லை என்பது போலவும் உணர்வீர்கள். எனினும், எவரின் ஆதரவும் இன்றி செயல்படும் தன்மையுடைய கும்பராசிக்காரர்கள், இதிலிருந்து மீண்டு விடுவார்கள். உங்களுடைய இந்த உறுதியான மனப்பான்மை, உங்களை இந்த விஷயத்தில் இருந்து காப்பாற்றி கரை சேர்க்கும்.

மீனம்

உங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் ஆர்வம் எப்போதும் இருக்கும். அதற்கான காரணத்தை நீங்கள் தேடிக் கொண்டு இருப்பீர்கள். அதனால் இன்று நீங்கள் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தினசரி பணியிலிருந்து சிறந்து விலகி, புத்துணர்ச்சி பெற இது மிகவும் தேவையான விஷயமாகும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.