ETV Bharat / bharat

நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் சீனா- பிபின் ராவத்!

author img

By

Published : Nov 12, 2021, 8:10 PM IST

நாட்டின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் (Bipin Rawat) எச்சரித்துள்ளார். மேலும், “சீனா எல்லை மீறவில்லை, தனது எல்லைப் பகுதியில் கிராமங்களை கட்டுகிறது” என்றார்.

Bipin Rawat
Bipin Rawat

டெல்லி : நாட்டின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல், இந்திய- சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களை குறைப்பது சாத்தியமல்ல என்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் (Bipin Rawat) எச்சரித்துள்ளார்.

மேலும், “அணு ஆயுதம் கொண்ட அண்டை நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் "நம்பிக்கை" இல்லாமை மற்றும் "சந்தேகம்" அதிகரித்து வருகின்றன. இரு அண்டை நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகளின் சமீபத்திய சந்திப்பு எல்லை மோதலை தணிக்க முன்மொழிவதில் எந்த முடிவையும் தரவில்லை” என்றும் கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “சீனா இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஆகையால், இந்திய- சீன எல்லையில் பாதுகாப்பில் உள்ள இந்திய வீரர்களை குறைக்க இயலாது” என்றார்.

அதேநேரம் சீனா இந்தியாவிற்குள் கிராமங்களை உருவாக்குகிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார். இது குறித்து பிபின் ராவத் கூறுகையில், “ இது உண்மையல்ல, உண்மையான கட்டுப்பாட்டுக் பகுதிகளில் சீன ஆக்கிரமிப்பு இல்லை. தனது எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் மட்டுமே சீனா கிராமங்களை அமைக்கிறது, எல்லை மீறவில்லை” என்றார்.

முன்னதாக, சீனா- திபெத் தன்னாட்சிப் பகுதியிலும், இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்திற்கும் இடையேயான சர்வதேச எல்லை கட்டுப்பாடு பகுதியிலும் சர்ச்சைக்குள்ள இடத்தில் ஒரு பெரிய கிராமத்தை கட்டியிருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்திருந்தது.

லடாக்கில் 2020ஆம் ஆண்டு இந்திய வீரர்கள் மீது சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீனா தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதை முதலில் சீனா மறுத்தபோதிலும் பின்னர் ஒப்புக்கொண்டது.

இதையடுத்து இந்திய சீன எல்லையில் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் எல்லையில் வீரர்களை குறைக்க இயலாது என முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நீங்கள் இந்து என்றால் இந்துத்துவம் எதற்கு? ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு எதிராக சாட்டை சுழற்றும் ராகுல் காந்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.