வெண்பொங்கல் உண்டு கோயிலைக் காக்கும் பணியில் ஈடுபடும் அதிசய முதலை!

author img

By

Published : Oct 26, 2020, 8:14 PM IST

crocodile at Ananthapura Lake Temple

கேரளாவின் கும்பாலா பகுதியில் ஏரியின் நடுவே அமைந்துள்ள அனந்தபுரம் கோயிலை, முதலை ஒன்று காவல்காத்து வருவதுடன், அக்கோயிலின் சிறப்பம்சமாகவும் விளங்கி பக்தர்களை ஈர்த்து வருகிறது.

காசர்கோடு (கேரளா): இந்தியாவின் ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோயில்களிலும் தனிச் சிறப்புகள் உண்டு. பழமையான கோயில்கள் பலவற்றில் வியக்கத்தக்க சிறப்பம்சங்கள் அடங்கியிருக்கின்றன. அந்த வகையில் கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் அமைந்திருக்கிறது ​ஏரியின் நடுவேயுள்ள அனந்தபுரம் கோயில்.

கேரளாவின் கும்பாலா என்ற இடத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் முதல் சிறப்பம்சம் ஏரியின் நடுவே அமைந்திருப்பது. பல்வேறு நீர் நிலைகள் அமைந்திருந்தாலும், ஏரிக்கு நடுவில் இருக்கும் கோயில் இது மட்டும்தான். திருவனந்தபுரத்தில் இருக்கும் அனந்த பத்மநாத சுவாமியைப் போல இந்தத் திருக்கோயிலிலும் பெருமாள் காட்சி அளிக்கிறார். இங்குள்ளவர்கள் திருவனந்தபுரம் கோயிலுக்கு முன் இங்கு தான் முதலில் பத்மநாத சுவாமி குடியிருந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.

"எங்கள் பொறுமையை இஸ்லாமியர்கள் சோதிக்கக்கூடாது" - உன்னாவ் பாஜக எம்.பி.,

ஏரி சூழ்ந்திருக்கும் இந்தக் கோயிலை, ஒரு முதலை தான் காவல் காத்துக் கொண்டிருப்பதாக வியக்க வைக்கும் தகவல் ஒன்றையும் இவர்கள் தெரிவிக்கின்றனர். அதோடு ஒரு முதலை இறந்தால், மற்றொரு முதலை அந்த இடத்தை பாதுகாக்க வந்துவிடும் எனவும் கூறப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக இங்கு முதலை இருப்பதை பார்க்கும் பலர், ஒரு முதலைக்கு அதிகமாக இங்கு பார்த்ததில்லை எனவும் கூறுகின்றனர்.

இங்குள்ள முதலைக்கு பபியா எனப் பெயரிட்டு இவர்கள் அதனை அழைத்து வருகின்றனர். கோயிலின் பாதுகாவலனாகக் கருதப்படும் பபியாவுக்கு உரிய மரியாதையும் அளிக்கப்படுகிறது. பொதுவாக முதலைகள் என்றால் அசைவம் தான் சாப்பிடும். ஆனால் இங்குள்ள முதலையோ சுத்த சைவம். ஏரியில் இருக்கும் மீனைக் கூட சாப்பிடாதாம். இந்த முதலைக்கு கோயில் குருக்கள், ஒவ்வொரு நாளும் உச்சிகால பூஜையின்போது வெல்லம் கலந்த சாதத்தை சாப்பிடக் கொடுக்கிறார். இதனை ’முசலி நெய்வேத்தியம்’ எனக் குறிப்பிடுகின்றனர்.

அனந்தபுர ஏரிக் கோயிலை காவல் காக்கும் அதிசய முதலை

தேர்ந்த விளையாட்டு வீரரைப் போல் கைப்பந்து விளையாடும் நாய் ’சீசர்’ - வைரல் காணொலி!

அதுமட்டுமல்லாமல் இந்த முதலை ஏரியில் குளிக்கச் செல்லும் பக்தர்கள், கோயில் குருக்களை இதுவரை தாக்கியதே இல்லையாம். அப்படி ஒரு சாதுவான இது முதலை எனக் கூறுகின்றனர் இங்கு வந்து செல்லும் பக்தர்கள். இந்தத் திருக்கோயில் அமைந்துள்ள கும்பாலாவுக்கு, கர்நாடகாவின் மங்களூரிலிருந்தும், கேரளாவிலுள்ள கண்ணூரிலிருந்தும் பல பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் மூலமாக கண்ணூர் அடைந்து அங்கிருந்து செல்லலாம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.