'ஜெய் ஸ்ரீராம் சொல்லு' என துன்புறுத்தப்பட்டு இறந்த இளைஞர்!

author img

By

Published : Jun 24, 2019, 9:15 AM IST

ஜார்கண்ட்: ராஜஸ்தான் மாநிலம் சரைகேலா கர்சவானில் சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட இஸ்லாமிய இளைஞர் அப்பகுதி மக்கள் அடித்துத் துன்புறுத்தியதால் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜார்கண்டில் உள்ள சரைகேலா கர்சவானில், 22 வயது இளைஞரை இருசக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி அப்பகுதி மக்கள் கட்டி வைத்து அடித்துள்ளனர். பின்னர் அவரது பெயரைக் கேட்டபோது, அவர் ஷாம்ஸ் தப்ரெஸ் என்று தனது பெயரை கூறியுள்ளார். அவர் இஸ்லாமியர் என தெரிந்துகொண்ட அப்பகுதி மக்கள் அந்த இளைஞரை அதிகமாக துன்புறுத்தியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் அந்த நபரிடம் மத ரீதியாக ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான் எனக் கூறுமாறு வற்புறுத்தினர். தனது உடம்பு முழுவதும் ரத்தம் சொட்டச் சொட்ட பேசமுடியாத நிலையில் இருந்த அந்த இளைஞர் உயிர் பயத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று கூறியுள்ளார். அதன் பிறகும் அடித்து உதைத்து துன்புறுத்தப்பட்ட இளைஞர் எழுந்து நடக்க முடியாத நிலையில் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ரத்தம் சொட்டச் சொட்ட நேற்று காலை சதர் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மிகவும் மோசமான நிலையில் தாக்கப்பட்டிருந்த ஷாம்ஸ் தப்ரெஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த உறவினர்கள், ஷாம்ஸ் தப்ரெஸ் திருட்டு சம்பவத்தால் தாக்கப்படவில்லை; மதவாதத்தால் தாக்கப்பட்டுள்ளார், அதற்கு காவல்துறையும் துணைபோயுள்ளது என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர். இளைஞரின் இறப்பிற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

'பசுவதை பெயரில் தாக்கப்பட்ட இஸ்லாமியர்கள் தற்போது மதவாதம் என்ற பெயரில் ஜெய் ஸ்ரீராம் எனக் கூறுமாறு தாக்கப்பட்டு உயிரிழப்பது ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது' என மக்களவையை அதிரவிட்ட அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.