குளிர் கால பயணம்... வாகன ஓட்டிகளுக்கு நிபுணர்கள் ஆலோசனை

author img

By

Published : Nov 25, 2022, 10:36 AM IST

Etv Bharat

குளிர்காலத்தில், பனிப்பொழிவு அதிகம் இருக்கும் போது எதிரே வரும் வாகனம் தெரியாமல் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. சரி சாலை விபத்துகளில் சிக்காமல் இருப்பது எப்படி? நிபுணர்களின் பரிந்துரையை விரிவாக பார்க்கலாம்.

* முதலில் பனி அதிகமாக இருக்கும் போது பயணத்தை தவிர்ப்பது நல்லது

* தேவைப்பட்டால் துடைப்பான் பயன்படுத்தவும். ஹை பீம் லைட்டுகளுக்கு பதிலாக லோ பீம் லைட் போட்டால் சாலை நன்றாக தெரியும்.. வெளிச்சத்தின் தூரமும் அதிகம் இருக்கும்.

* முன்னால் செல்லும் வாகனங்களில் இருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்திருங்கள். திடீர் பிரேக்கிங் பக்கவாட்டாக வாகனத்தை இழுத்து செல்லும்

* ஸ்டீயரிங் வீலில் எப்போதும் கைகளை வைத்துக்கொண்டு குறைந்த வேகத்தில் ஓட்டுவது முக்கியம்.

* பெரும்பாலான கார் உற்பத்தியாளர்கள் ஜன்னல்களில் உள்ள பனியை உருக்க டி-ஃபோகர்கள் வழங்குகிறார்கள். இது கண்ணாடியை சூடாக்கி, பனியை உருக்கும்.

* குறைந்த ஒலியில் இசையைக் கேளுங்கள். முடிந்தால் அணைப்பது நல்லது.

* மது அருந்தியவர்கள் இயல்பு நிலைக்கு வரும் வரை வாகனம் ஓட்டக்கூடாது

* சாலை ஓரத்தில் வாகனத்தை ஓட்டும்போது, ​​சிக்னல் விளக்கை ஏற்றி மெதுவாக நிறுத்த வேண்டும்

* பிரதான விளக்குகள், சிக்னல் விளக்குகள், குறைந்த பீம் விளக்குகள் அனைத்தையும் எரிய வைக்க வேண்டும்.

இதையும் படிங்க : ஒரே மேடையில் 3 ஆயிரம் ஜோடிகளுக்கு டும்.. டும்.. டும்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.