ETV Bharat / bharat

சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான உயிரி எரிபொருள்- World Biofuel Day

author img

By

Published : Aug 10, 2021, 1:26 PM IST

நமது பாரம்பரிய எரிபொருளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான முறையில் இருக்கும் உயிரி எரிபொருள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் பொருட்டு இன்று உலக உயிரி எரிபொருள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான உயிரி எரிபொருள்
சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான உயிரி எரிபொருள்

காலநிலை மாற்றத்தின் பின்விளைவுகளாக இயற்கைப் பேரழிவுகளையும், சுற்றுச்சூழலில் மாறுபாட்டையும் நாம் நாள்தோறும் சந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில், வாழ்க்கையின் அனைத்து இடங்களிலும் நிலைத்தன்மை (இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பது) தேவைப்படுகிறது.

இதுபோன்ற சூழலில் மனிதர்கள் உயிரி எரிபொருளைப் பயன்படுத்தும் முறை எதிர்காலத்தில் சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனையடுத்தே இன்று (ஆக. 10) உலக உயிரி எரிபொருள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் எரிபொருளுக்கு மாற்றாக அமையும் இந்த உயிரி எரிபொருள் குறித்து நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அதற்காகவே இந்நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

டீசல் இன்ஜினைக் கண்டுபிடித்த சார் ருடோல்ஃப் டீசலின் நினைவாக இன்று உலக உயிரி எரிபொருள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. சார் டீசல் 1893ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று மெக்கானிக்கல் இன்ஜினை கடலை எண்ணெய்யை வைத்து வெற்றிகரமாக இயக்கினார்.

இதனையடுத்தே நாம் பயன்படுத்தும் எரிபொருளுக்கு மாற்றாக உயிரி எரிபொருளை பயன்படுத்த முடியும் என டீசல் கண்டுபிடித்தார். இந்தச் சாதனையை நினைவுகூரும் வண்ணம் இந்த நாள் உயிரி எரிபொருள் நாளாகத் தேர்வுசெய்யப்பட்டது.

உயிரி எரிபொருள்கள் புதுப்பிக்கத்தக்க, மக்கும் தன்மையுடையவை ஆகும். இந்தத் தன்மை காரணமாகவே இந்த எரிபொருள்கள் மற்ற பாரம்பரிய எரிபொருள்களைக் காட்டிலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

எந்த ஒரு உயிர் கொண்ட விவசாயக் கழிவுகள், மரங்கள், பயிர்கள் உள்ளிட்ட தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் எரிபொருளும் உயிரி எரிபொருள் எனப்படுகிறது. இந்த எரிபொருளில் குறைவான கார்பன் உள்ளது.

இதையும் படிங்க: உலக சிங்கங்கள் தினம் - வனவேந்தனை காப்பது நமது கடமை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.