ஜவானுக்கு அடுத்து புஷ்பாவா?.. அப்டேட் கொடுத்த அட்லீ!

ஜவானுக்கு அடுத்து புஷ்பாவா?.. அப்டேட் கொடுத்த அட்லீ!
Atlee's new project: ஜவான் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் அட்லீ, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹைதராபாத்: ஜவானின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் இயக்குனர் அட்லி அடி எடுத்து வைக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.
தமிழ் திரையுலகில் முன்னணி டைரக்டராக வலம் வரும் அட்லீ தற்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது தயாரிப்பு குழு தரப்பில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஜவான் வெற்றியைத் தொடர்ந்து அட்லீ தனது புதிய கதையில் தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜூனை வைத்து இயக்கப் போவதாக அறிவித்து இருந்தார்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் ஒன்றான வெப்லோட் உரையாடலில், அல்லு அர்ஜூனுடன் இணைந்து படம் பன்னுவதை இறைவன் தான் முடிவெடுப்பான் எனக் கூறியிருந்தார். மேலும் அந்த உரையாடலில் அட்லீ கூறுகையில், "நடிகர் அல்லு அர்ஜூன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.
எங்களுக்கு ஒரு சிறிய ஐடியா உள்ளது. அதை வைத்து இறைவனின் அனுகிரகத்தால் படம் இயக்க உள்ளேன். கண்டிப்பாக அந்த படம் நன்றாக வரும், மிகப்பெரிய அளவில் வெற்றியடையும்" என வெப்லோட் உரையாடலில் கூறினார். தற்போது அட்லீ 4 மாதங்கள் தனது மகன் மற்றும் மனைவியுடனும் நேரத்தை செலவிடப் போவதாகக் கூறியுள்ளார்.
அதன்பின் தனது அடுத்த படத்தை இயக்க ஆரம்பிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், அட்லீ தனது எதிர்கால திட்டங்களை சிறிது வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் பல்வேறு நகர்வுகளை முன்னெடுத்து உள்ளார். தனது படங்கள் மூலம் நிறைய ரசிகர்களை கவரந்து வரும் அவர், அதை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க முயற்சித்து வருவதாக கூறி உள்ளார்.
மேலும், பாலிவுட் நடிகர்களான சல்மான் கான் மற்றும் ஹிரிதிக் ரோஷனிடம் தனது கதை தொடர்பான கருத்தையும் கூறியிருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார். இதற்கிடையில் இயக்குனர் அட்லீ தயாரிப்பாளர் பிரவேசம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவரது முதல் படத்திறகு VD18 என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் கசிந்து உள்ளது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தயாரிப்பாளர் அட்லீ தனது மனைவி பிரியா மற்றும் அசோசியேஷன் முராத் கெடானியுடன் இணைந்து தயாரிக்கும் படத்தை அடுத்த வருடம் கோடை விடுமுறையில் திரையரங்கில் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
