ஆண்டிலியா வழக்கில் குற்றப்பத்திரிக்கை வழங்க அதிகம் செலவாகும் - என்ஐஏ விளக்கம்!

author img

By

Published : Aug 5, 2022, 3:46 PM IST

Etv Bharatஆண்டிலியா வெடிகுண்டு வழக்கில் குற்றப்பத்திரிக்கை வழங்க அதிகம் செலவாகும்- மும்பை நீதிமன்றத்தில் என்ஐஏ விளக்கம்

ஆண்டிலியா வெடிகுண்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகலை வழங்க அதிக செலவாகும் என மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

மும்பை(மகாராஷ்டிரா): ஆண்டிலியா வெடிகுண்டு மிரட்டல் மற்றும் மன்சுக் ஹிரேன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை குற்றவாளி தரப்பினருக்கு வழங்க முடியாது என்று மும்பை நீதிமன்றத்தில் என்ஐஏ தெரிவித்துள்ளது. மேலும் குற்றப்பத்திரிகையின் நகலை வாங்க என்ஐஏவுக்கு ரூ.40 லட்சம் செலவாகும் என்று மும்பை செஷன்ஸ் கோர்ட்டின் சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அளவு அதிகமாக செலவு செய்ய முடியாது எனவும், நிதி இல்லை எனவும் என்ஐஏ தெரிவித்துள்ளது. மேலும், இந்த நகல்களை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு 258 நாட்கள் (8 மாதம்)அல்லது அதற்கு மேல் ஆகும் என்றும் என்ஐஏ கூறியுள்ளது.

டிஜிட்டல் ஆதாரங்கள்: இதுகுறித்து என்ஐஏ தரப்பினர் விளக்கம் அளித்தனர். மும்பை மற்றும் தானேயில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் கைப்பற்றப்பட்ட காட்சிகள் உட்பட ஏராளமான டிஜிட்டல் ஆதாரங்கள் இந்த ஆதாரத்தில் அடங்கும். தேசிய புலனாய்வு முகமை தம்மிடம் தொலைபேசி பதிவுகள் மற்றும் அவர்களின் உரையாடல்களின் மில்லியன் கணக்கான பிரதிகள் இருப்பதாகவும் தெரிவித்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 25 அன்று தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் தெற்கு மும்பை இல்லமான 'ஆண்டிலியா' அருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. இதில் தொடர்புடையதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அலுவலர் சச்சின் வாஸ், 'என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' பிரதீப் சர்மா மற்றும் பத்து பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதனைத்தொடர்ந்து அந்த வாகனத்தின் உரிமையாளர் எனக் கூறிய தானேவைச் சேர்ந்த தொழிலதிபர் மன்சுக் ஹிரான் மார்ச் 5 அன்று தானேயில் உள்ள ஒரு ஓடையில் இறந்து கிடந்தார். இந்த இருவேறு குற்றங்கள் தொடர்பான குற்றப்பத்திரிகையில் இருநூறு சாட்சிகள் பட்டியலிடப்பட்டு 164 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆண்டிலியா வெடிகுண்டு மிரட்டல் மற்றும் மன்சுக் ஹிரேன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை குற்றவாளி தரப்பினருக்கு வழங்க முடியாது என்று மும்பை நீதிமன்றத்தில் என்ஐஏ தெரிவித்துள்ளது. மேலும் குற்றப்பத்திரிகையின் நகலை வாங்க என்ஐஏவுக்கு ரூ.40 லட்சம் செலவாகும் என்று மும்பை செஷன்ஸ் கோர்ட்டின் சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:பிகாரில் கள்ளச்சராயம் குடித்தவர்கள் உயிரிழப்பு - பலருக்கு கண் பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.