உ.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்காது - பூபேஷ் பாகல்

author img

By

Published : Oct 12, 2021, 1:42 PM IST

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், bhupesh bagal

யோகி ஆதித்யநாத் அரசின் மீது பெரும் எதிர்ப்பலை உருவாகியுள்ளது எனவும், அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் பாஜக தனது ஆட்சியைத் தக்கவைக்காது என்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்தார்.

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் லக்கிம்பூரிலிருந்து திரும்பிய பிறகு நேற்று (அக். 11) செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது அவர், "உத்தரப் பிரதேச பாஜக ஆட்சியின் மீதான எதிர்ப்பலை உருவாகியுள்ளது.

உழவர், இளைஞர்கள், பட்டியலின மக்கள் முதல் வணிகர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது வருத்தத்தில் உள்ளனர். அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் யோகி அரசு கண்டிப்பாக ஆட்சியைத் தக்கவைக்காது" எனத் தெரிவித்தார்.

என்றும் இரட்டை நிலைப்பாடுதான்

மேலும், சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் ராமன் சிங் தன்மீது வைத்து குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்துப் பேசிய அவர், "சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற மேற்கு வங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பின், அங்கு ஏற்பட்ட கலவரத்திற்கு சத்தீஸ்கர் பாஜகவினர் இங்கு போராட்டம் நடத்தினர்.

சத்தீஸ்கருக்கும், மேற்கு வங்க கலவரத்திற்கும் என்ன தொடர்பு? பாஜக அனைத்து விவகாரத்திலும் இரட்டை நிலைப்பாட்டைதான் எடுக்கிறது" என்றார்.

லக்கிம்பூர் விவகாரம்

அடுத்தாண்டு நடைபெற இருக்கும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்தப் பார்வையாளராக பூபேஷ் பாகல் நியமிக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த உழவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்றனர். அப்போது, அவர்களுடன் பூபேஷ் பாகலும் உடனிருந்தார். மேலும், உயிரிழந்த உழவரின் குடும்பத்திற்காக தலா 50 லட்சம் ரூபாய் நிவாரணமாக பூபேஷ் பாகல் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லக்கிம்பூர் வன்முறை: 8 பேர் உயிரிழப்பும்...தொடரும் அநீதிகளும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.